புதிதாக நியமிக்கப்பட்டுள்ள விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ. பிரமித்த பண்டார தென்னகோன் அவர்களை மாரியாதை நிமித்தம் இன்று (ஜூலை 06) பாதுகாப்பு இராஜாங்க அமைச்சில் சந்தித்தார்.
கொழும்பில் உள்ள பாகிஸ்தானிய உயர்ஸ்தானிகராலயதில் பாதுகாப்பு ஆலோசகராக கடையாற்றி தனது பதவிக் காலத்தை நிறைவு செய்து நாடு திரும்பவுள்ள கேர்ணல் முஹம்மட் சப்தர் கான், இலங்கையின் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவை சந்தித்தார்.
முப்படை அதிகாரிகளுக்காக ஆட்கடத்தல் தடுப்பு தொடர்பான இரண்டு நாள் கொண்ட நிகழ்வு ஜூலை 04ஆம் திகதி முதல் 05ஆம் திகதி வரை கொழும்பு Movenpick ஹோட்டலில் வெற்றிகரமாக நடத்தப்பட்டது.
நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் நிலவும் மழை மற்றும் காற்றுடன் கூடிய நிலை தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக வானிலை நிலையம் தெரிவித்துள்ளது.
முல்லைத்தீவு வள்ளுவர்புரத்தில் இராணுவத்தினரால் நிர்மாணிக்கப்பட்ட புதிய வீடொன்று அண்மையில் முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் எம்.கே ஜயவர்தன அவர்கள் கலந்துகொண்ட நிகழ்வின் போது தகுதியான குடும்பம் ஒன்றிற்கு வழங்கி வைக்கப்பட்டது.
புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இலங்கை விமானப்படை (SLAF) தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ வணக்கத்திற்குரிய மகா சங்கத்தினரின் ஆசீர்வாதங்களுக்கு மத்தியில் ஜூலை 01 ஆம் திகதி விமானப்படைத் தளபதியாக பதவியேற்றார்.
இலங்கை இராணுவ (SLA) துருப்புக்கள் பருத்தித்துறை பிரதேச மக்களுடன் இணைந்து சத்கோட்டை மற்றும் ஊறணி கடற்கரைப் பகுதியை அண்மையில் சுத்தப்படுத்தினர்.
மாலியில் உள்ள ஐக்கிய நாடுகளின் மினுஸ்மா பணிகளில் பணியாற்றுவதற்காக பயிற்றுவிக்கப்பட்ட 5 வது இலங்கை அமைதிகாக்கும் படைக்குழுவில் 243 இராணுவ வீரர்களில் 170 போர் கொண்ட குழு முதல் கட்டமாக சனிக்கிழமை (ஜூலை 01) மாலை மாலிக்கு புறப்பட்டு சென்றனர்.
Tamil
இலங்கை சோஷலிச ஜனநாயக குடியரசின் அதிமேதகு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களினால் இலங்கை விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுதர்சன பத்திரன அவர்களுக்கு "எயார் சீப் மார்ஷல் " எனும் பதவி உயர்வு 2023 ஜூன் 29ம் திகதி வழங்கி வைக்கப்பட்டது.
தனது சேவையிலிருந்து ஓய்வு பெற உள்ள இலங்கை விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுதர்சன பத்திரன அவர்களை வழியனுப்பு வைக்கும் முகமாக இலங்கையின் பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் கௌரவ.பிரமீத பண்டார தென்னக்கூன் அவர்களின் அழைப்பின் பேரில் கடந்த 2023 ஜூன் 26ம் திகதி அமைச்சராகத்திற்கு உத்தியோக பூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டார்.
இலங்கை விமானப்படையில் 38 வருட சேவையை நிறைவு செய்த விமானப்படை தளபதி எயார் மார்ஷல் பத்திரனவின் ஓய்வு நாளை முன்னிட்டு பாதுகாப்பு அமைச்சின் ஏற்பாட்டில் இன்று இடம்பெற்ற நினைவு நிகழ்வில் கருத்து வெளியிட்ட பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன மூன்று தசாப்தங்களாக நாட்டில் பயங்கரவாதத்தை ஒழித்து மனிதாபிமான நடவடிக்கைக்கு விமானப்படைக்கு தலைமை தாங்கி, நாட்டில் பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுத்து பாதுகாப்பான நாட்டை கட்டியெழுப்புவதில் எயார் மார்ஷல் பத்திரன சிறப்பாக செயற்பட்டார் என்று மேலும் தெரிவித்தார்.
பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற தேசிய கைத்தொழில் கண்காட்சியின் இறுதி நாள் நிகழ்வில் பதில் பாதுகாப்பு அமைச்சர் கௌரவ பிரமித்த பண்டார தென்னகோன் அவர்கள் இன்று (ஜூன் 25) கலந்து கொண்டார்.
2023-2028 ஆம் ஆண்டுக்கான தேசிய அவசரகால செயற்பாட்டுத் திட்டத்தை அபிவிருத்தி செய்வதற்கான செயலமர்வு இன்று (ஜூன் 23) கொழும்பு கலதாரி ஹோட்டலில் இடம்பெற்றது.
கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகம் அதன் தொடக்கத்தில் இருந்து புகழ்பெற்ற பல்கலைக்கழகமாக மாறியுள்ளதுடன், கல்வி மற்றும் ஆராய்ச்சியில் சிறந்து விளங்குவதைத் தொடர்ந்து முன்னெடுத்துச் சென்றுள்ளது என பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.
பங்களாதேஷின் பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் அதிகாரிகள் கல்லூரியின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் பைசுர் ரஹ்மான் அவர்கள் இன்று (ஜூன் 22) பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவை சந்தித்தார்.
யாழ்ப்பாணக் குடாநாட்டில் கடைக்காடு பகுதியில் நன்கொடையாளர்களின் உதவியுடன் இலங்கை இராணுவத்தினால் நிர்மாணிக்கப்பட்ட மற்றுமொரு வீடு அண்மையில் (ஜூன் 18) பயனாளி குடும்பத்திடம் கையளிக்கப்பட்டது.
பிரான்ஸ் கடற்படைக்கு சொந்தமான 'Dupu de Lôme' என்ற கப்பல் உத்தியோகபூர்வ விஜயமொன்றினை மேற்கொண்டு கொழும்பு துறைமுகத்தை இன்று (ஜூன் 21) காலை வந்தடைந்தது.
யோகாவின் மூலம் கிடைக்கும் பல நன்மைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், உடல், மன மற்றும் ஆன்மீக நல்வாழ்வுக்கான முழுமையான அணுகுமுறையை மேம்படுத்தவும் இது ஒரு தளமாக செயல்படுகிறது.
இலங்கைக்கான ஜப்பானிய பதில் தூதுவர் கொதாரி கட்சுகி அவர்கள் பதில் பாதுகாப்பு அமைச்சர் கெளரவ பிரமித்த பண்டார தென்னகோனை சந்தித்தார். கொழும்பில் உள்ள அமைச்சரின் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 20) இந்த சந்திப்பு இடம்பெற்றது.
லெபனானில் உள்ள ஐக்கிய நாடுகளின் இடைக்காலப் படைப் பிரிவுகள் மற்றும் லெபனான் ஆயுதப் படைகள் ஆகியன இருவருடத்துக்கு ஒருமுறை நடத்தப்படும் ஸ்டீல் ஸ்ரொம் பயிற்சி I – 2023 லெபனானில் உள்ள சவுத் நகோரா முகாமின் துப்பாக்கிச் சூட்டு பயிற்சி நிலையத்தில் ஜூன் 05-09 வரை ஐநா வழிகாட்டுதல்களுக்கு அமைய தீ ஆதரவு நடைமுறை பயிற்சி மேற்கொள்ளப்பட்டது.
பதில் பாதுகாப்பு அமைச்சர், கௌரவ பிரமித்த பண்டார தென்னகோன் அவர்கள் திங்கட்கிழமை (19) மாலை மல்வத்து மற்றும் அஸ்கிரி பீடங்களின் மகாநாயக்க தேரர்கள் மற்றும் அனுநாயக்க தேரர்களை சந்தித்து ஆசிர்வாதங்களைப் பெற்றுக்கொண்டார்.
இந்திய கடற்படைக்கு சொந்தமான ‘INS Vagir’ என்ற நீர்மூழ்கிக் கப்பல் உத்தியோகபூர்வ விஜயமொன்றினை மேற்கொண்டு இன்று (ஜூன் 19) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்ததாக கடற்படை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.