--> -->
வருடாந்த ரஷ்ய படைவீரர்களின் வெற்றி தின நிகழ்வு பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவின் பங்குபற்றுதலுடன் கொழும்பில் உள்ள போர் நினைவிடத்தில் வியாழக்கிழமை (மே 04) இடம்பெற்றது.
மூவித ரத்தினங்களால் ஆசீர்வதிக்கப்பட்ட வெசாக் பெர்ணமி தினம் பௌத்த நாட்காட்டியின் மிக முக்கியமான நாட்களில் ஒன்று என்பதோடு இது புனிதத்துவமான முக்கியத்துவத்தையும் கொண்டுள்ளது.
Tamil
எதிர்வரும் வெசாக் பௌர்ணமி போயா கொண்டாட்டத்தை முன்னிட்டு இன்று (மே 04) பாதுகாப்பு அமைச்சின் வளாகத்தில் விசேட ‘தம்ம’ பிரசங்கம் நடைபெற்றது.
மூன்றாம் சார்ள்ஸ் மன்னரின் முடிசூட்டு விழாவில் கலந்துகொள்வதற்காக கௌரவ ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் இன்று (04) காலை இலங்கையிலிருந்து பிரித்தானியாவிற்கு பயணமானார்.
நோயாளிகளின் இரத்த தேவையை பூர்த்தி செய்யும் நோக்கில் எதிர்வரும் வெசாக் பண்டிகையை முன்னிட்டு, முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் படையினர் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலை அதிகாரிகளுடன் இணைந்து, கடந்த மே 1ஆம் திகதி முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையக வளாகத்தில் இரத்ததான நிகழ்வினை மேற்கொண்டனர் என இராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
போர் வீரர்கள் நினைவு மாதத்தினை முன்னிட்டு பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன அவர்களுக்கு புதன்கிழமையன்று (மே 03) போர்வீரர்களின் கொடி அணிவிக்கப்பட்டது.
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று (மே 04) பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்திய விமானப்படைத் தளபதி எயார் சீப் மார்ஷல் வி. ஆர்.சௌதாரி பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன அவர்களை இன்று (மே 03) சந்தித்தார்.
இந்திய விமானப்படைத் தளபதி எயார் சீப் மார்ஷல் வி.ஆர்.சௌதாரி பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ பிரமித பண்டார தென்னகோன் அவர்களை சந்தித்தார்.
இன்று (02) வெளியான வளிமண்டலவியல் திணைக்களத்தின் முன்னறிவிப்புகளின்படி, நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என எதிர்வுகூறியுள்ளது.
இலங்கை கடலோர காவல்படையினரால் மற்றுமொரு தொகுதி கடலாமை குஞ்சுகள் அண்மையில் கடலுக்கு விடுவிக்கப்பட்டுள்ளது.
முதலாம் உலகப் போரில் சிலோன் பிளாண்டர்ஸ் ரைபிள் படையணியின் உறுப்பினர்களைக் கொண்ட ‘அன்சக்’ தலைமையிலான நேச நாட்டுப் படைகளின் போர் வீரர்களின் அர்ப்பணிப்பு மற்றும் தன்னலமற்ற தியாகங்களையும் நினைவுகூரும் நிகழ்வு இன்று (ஏப்ரல் 25) கொழும்பு 05 இல் உள்ள ஜாவத்தே மயானத்தில் இடம்பெற்றது.
புதுடெல்லியை தளமாகக் கொண்ட நமீபியா குடியரசின் உயர்ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் பிரிகேடியர் ஜெனரல் டைட்டஸ் சைமன் பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவை சந்தித்தார். தனது பதவிக்காலம் நிறைவடைந்து நாடு திரும்பவுள்ள பாதுகாப்பு ஆலோசகர் மரியாதை நிமித்தமாக குறித்த சந்திப்பை மேற்கொண்டார்.
பாதுகாப்பு அமைச்சின் ஏற்பாட்டில் கோட்டே, ஸ்ரீ ஜயவர்தனபுரவில் அமைந்துள்ள பாதுகாப்பு தலைமையக வளாகத்தில் இன்று (19) நடைபெற்ற சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு விழாவில் கெளரவ ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் கலந்து சிறப்பித்தார்.
தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டு கொண்டாட்டத்தை தொடர்ந்து பாதுகாப்பு அமைச்சு அதன் பணிகளை ஆரம்பித்தது.