Tamil
நாட்டின் அண்மைய கடுமையான பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு அரசாங்கம் முன்னெடுத்த சிறந்த பொருளாதார முயற்சியின் பலன்களை நாட்டு மக்கள் தற்போது அனுபவிக்கத் தொடங்கியுள்ளனர்.
கொழும்பு துறைமுகத்தில் நடைபெறும் SLINEX-23 கூட்டு கடற்படைப் பயிற்சியில் பங்கேற்கும் 'ஐஎன்எஸ் கில்தான்' என்ற இந்திய கடற்படைக் கப்பலை பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ பிரேமித பண்டார தென்னகோன் இன்று (ஏப்ரல் 05) பார்வையிட்டார்.
சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் (CSD) புதிய மேலதிக பணிப்பாளர் நாயகமாக ரியர் அட்மிரல் மெரில் சுதர்ஷன (ஓய்வு) நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கை-இந்திய கடற்படை பயிற்சி (SLINEX)-23 இன் துறைமுக கட்டம் திங்கள் (ஏப்ரல் 3) தொடக்கம் (ஏப்ரல் 5) புதன் வரை கொழும்பு துறைமுகத்தில் நடைபெற உள்ளது. இந்திய கடற்படையின் இரண்டு கப்பல்களான 'ஐஎன்எஸ் கில்தான்' (INS Kiltan) மற்றும் 'ஐஎன்எஸ் சாவித்ரி' (INS Savitri) ஆகியவை கூட்டுப் பயிற்சியில் பங்கேற்பதற்காக இலங்கைக்கு வந்தடைந்துள்ளதாக இலங்கை கடற்படை (SLN) ஊடகம் தெரிவித்துள்ளது.
முப்படைகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட 48 அணிநடை பயிற்றுவிப்பாளர்கள் இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரியில் மார்ச் 20 முதல் 30 வரை பத்து நாள் கொண்ட அடிப்படை அணிநடை பயிற்றுவிப்பாளர் புத்துணர்ச்சி பாடநெறி சமீபத்தில் ஐக்கிய இராச்சியத்தின் நிபுணர்களின் உதவியிடன் நடைபெற்றது.
தான் ஜனாதிபதியாக இருக்கும் காலத்தில் சட்டம் ஒழுங்கை மீற எவருக்கும் இடமளிக்கப் போவதில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
தேசிய மாணவர் படையணியின் பாடத்திட்டம் காலத்திற்கு ஏற்றவாறு எதிர்காலத்தில் மாற்றியமைக்கப்படும் என தெரிவித்த பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ பிரமித பண்டார தென்னகோன், ரண்டம்பே தேசிய மாணவர் படையணி பயிற்சி நிலையத்திற்கு மேலதிகமாக வேறு இடங்களிலும் பயிற்சிகளை விரிவுபடுத்தவும், வசதிகளை பெற்றுக் கொடுப்பதற்கும் கவனம் செலுத்தப்படும் எனவும் குறிப்பிட்டார்.
தியகம மகிந்த ராஜபக்ச மைதானத்தில் தற்போது நடைபெற்று வரும் 58 வது இராணுவ தடகள சம்பியன்ஷிப் போட்டியில் இரண்டாம் நாளான வியாழன் (30) இன்று நடைபெற்ற கோலூன்றி பாய்தல், வேக நடை (10000 மீ) (ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவுகள்) ஆகியவற்றில் இராணுவ வீரர்கள் 3 தேசிய சாதனைகளை படைத்துள்ளனர்.
ஐக்கிய நாடுகளின் மதிப்பீடு மற்றும் ஆலோசனை குழு இலங்கைப் பாதுகாப்பு படைகளின் மேம்படுத்தப்பட்ட திறன்களை மதிப்பிடுவதற்கும் மாலியில் எதிர்கால ஐ.நா அமைதி காக்கும் பணிகளில் இணைவதற்கும் தற்போது இலங்கையில் உள்ள அமைதி காக்கும் நடவடிக்கை பயிற்சி நிறுவனத்திற்கு வெள்ளிக்கிழமை (24) விஜயத்தினை மேற்கொண்டனர்.
இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் அதிமேதகு போல் ஸ்டீபன்ஸ் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ பிரேமித பண்டார தென்னகோன் அவர்கள் இன்று (மார்ச் 28) கொழும்பு 07, வித்யா மாவத்தையில் அமைந்துள்ள பாதுகாப்பு இராஜாங்க அமைச்சில் வைத்து மரியாதை நிமிர்த்தம் சந்தித்தார்.
ஜெனரல் சர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம் மற்றும் ஜெர்மனியின் ப்ரெமன் பல்கலைக்கழகம் ஆகியவற்றுக்கு இடையே கல்வி ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று கையெழுத்திடப்பட்டது.
கௌரவ. பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன், ஜனாதிபதி பணிக்குழு பிரதானியும் ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு தொடர்பான சிரேஷ்ட ஆலோசகர் திரு.சாகல ரத்நாயக்க ஆகியோர் வெள்ளிக்கிழமை (24) பிற்பகல் நிரந்தரமாக காயமடைந்த போர்வீரர்களின் நலன்புரி நிலையமான அத்திடியவில் உள்ள மிஹிந்து செத் மெதுரவிற்கு அவர்களின் நலன்அறிவதற்கு விஜயம் செய்தனர்.
இலங்கை கடற்படையால் ஏற்பாடு செய்திருந்த 12வது பாதுகாப்பு சேவைகளின் மோட்டார் சைக்கிள் சாம்பியன்ஷிப் போட்டி - 2023 எனும் விருவிருப்பான மோட்டார் சைக்கிள் போட்டி அண்மையில் வெலிசரயில் உள்ள கொழும்பு சுப்பர் கிராஸ் ஓடுதளத்தில் நடைபெற்றது.
பேராசிரியர் சரத் கொட்டகம அவர்களினால் தேசிய பாதுகாப்புக் கல்லூரியின் கற்கை நெறிகளில் பங்கேற்பாளர்களுக்கான விருந்தினர் விரிவுரை அண்மையில் (மார்ச் 22) கொழும்பு 03, காலி வீதியிலுள்ள கல்லூரி வளாகத்தில் நிகழ்த்தப்பட்டது.
யாழ்ப்பாணத்தில் கடமையாற்றும் இராணுவத்தினருக்கான போதைப்பொருள் தடுப்பு தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு அண்மையில் (மார்ச் 19) இடம்பெற்றது.
வளிமண்டலவியல் திணைக்களத்தின் சேவைகள் பொருளாதார அம்சங்களின் பல துறைகளில் வலுவான தாக்கத்தைக் கொண்டுள்ளதுடன் இந்த துறைக்கு அரசு எப்போதும் முன்னுரிமை அளித்து வருகிறது.
இலங்கை இராணுவத்தின் முதல் தொகுதி மகளிர் கண்ணிவெடி அகற்றும் படையணியின் சின்னம் அணிவிப்பு நிகழ்வு கோட்டே ஸ்ரீ ஜெயவர்தனபுரேவில் உள்ள இராணுவ தலைமையகத்தில் நடைபெற்றது.