இலங்கைக்கான நெதர்லாந்து தூதுவர் அதிமேதகு பொனி ஹோர்பக் அவர்கள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ. பிரேமித பண்டார தென்னகோன் அவர்களை கொழும்பில் உள்ள அவரது அலுவலகத்தில் இன்று (மார்ச் 07) சந்தித்தார்.
இலங்கைக்கான அமெரிக்க தூதரகம் மற்றும் விமானப்படை தலைமையகத்தில் உள்ள பயிற்சி பிரிவு ஆகியவற்றின் ஒருங்கிணைப்புடன் ‘மனித உரிமைகள் நடமாடும் பயிற்சிக் குழு (MTT) மற்றும் கடல்சார் சட்ட நிறுவன திறன் உருவாக்கம் (ICB) தொடர்பான விசேட பயிற்சித் திட்டம் அண்மையில் இலங்கை விமானப்படையின் சீனக்குடா கல்லூரியில் நடத்தப்பட்டது.
லெபனானில் உள்ள ஐக்கிய நாடுகளின் அமைதிகாக்கும் படை பணிக்காக உள்ள 14 வது இலங்கை குழு, இன்று வியாழக்கிழமை (02) அதிகாலை லெபனானுக்கு வாழ்த்துக்களுக்கு மத்தியில் புறப்பட்டது.
இந்திய-இலங்கை கடல் எல்லைக்கு அருகில் உள்ள கச்சத்தீவில் அமைந்துள்ள புனித அந்தோணியார் தேவாலயத்தின் வருடாந்த பெருவிழா கொழும்பு உதவி ஆயர் அருட்தந்தை அன்டன் ரஞ்சித் பிள்ளைநாயகம் அவர்களின் தலைமையில் யாழ்.மாவட்ட செயலாளர் ஏ. சிவபாலசுந்தரம் அவர்கள் மற்றும் கடற்படை கிறிஸ்தவ சங்கத்தின் அமைப்பாளர்களின் பங்களிப்பின் பெருந்திரளான இலங்கை மற்றும் இந்திய பக்தர்களின் பங்கேற்புடன், 2023 மார்ச் 03 மற்றும் இன்று (2023 மார்ச் 04) வெகு விமரிசையாக நடைபெற்றதுடன் இறுதி பூஜை நிகழ்விற்காக, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா அவர்களின் பிரதிநிதியாக வடக்கு கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் அருண தென்னகோன் அவர்கள் கலந்துகொண்டார்.
Tamil
மக்களால் தெரிவு செய்யப்படும் பாராளுமன்றத் தேர்தல் மூலம் மாத்திரமே அரசாங்கத்தை மாற்ற முடியும் என்றும் வீதிகள் அதற்கு மாற்றுவழியல்ல என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் வலியுறுத்தியுள்ளார்.
லெபனானில் உள்ள ஐக்கிய நாடுகளின் அமைதிகாக்கும் படை பணிக்காக உள்ள 14வது இலங்கை குழு, இன்று வியாழக்கிழமை (02) அதிகாலை லெபனானுக்கு வாழ்த்துக்களுக்கு மத்தியில் புறப்பட்டது.
புதிதாக நியமிக்கப்பட்ட இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் அதிமேதகு லெவன் எஸ். ட்ஜகார்யன், பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவை மரியாதை நிமித்தம் சந்தித்தார்.
கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் மற்றும் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம் இணைந்து தொகுத்த “இந்தோ-பசிபிக் பிராந்தியத்திற்கான பொதுவான பார்வை” என்ற புத்தகத்தின் வெளியீட்டு நிகழ்வு நேற்று (பெப்ரவரி 27) கொழும்பு சினமன் கிராண்ட் ஹோட்டலில் நடைபெற்றது.
உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள பாகிஸ்தான் கடற்படைத் தளபதி அட்மிரல் முஹம்மது அம்ஜத் கான் இலங்கை பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவைச் சந்தித்தார்.
இந்திய கடற்படைக்கு சொந்தமான ‘INS Sukanya’ என்ற கப்பல் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இன்று (2023 பிப்ரவரி 27) காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்ததுடன், வருகை தந்த கப்பலை இலங்கை கடற்படையினர் கடற்படை மரபுகளுக்கு அமைவாக வரவேற்றனர்.
உலகில் இயற்கை அனர்த்தங்கள் ஏற்படும்போது இராணுவத்தினரை வெளிநாடுகளுக்கு அனுப்பும் பிரிவுக்கு மேலதிகமாக சுகாதார அனர்த்தங்கள் ஏற்படும்போது, இராணுவ குழுக்களை வெளிநாடுகளுக்கு அனுப்புவதற்கு தனியான பிரிவொன்று ஸ்தாபிக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான 7வது வருடாந்த பாதுகாப்பு உரையாடல் இந்தியாவின் புதுடெல்லியில் அண்மையில் நடைபெற்றது.
இலங்கை கடற்படையின் செயற்பாடுகளுக்காக Ideal Motors நிறுவனத்தினால் வடிவமைக்கப்பட்டு உள்நாட்டில் அசெம்பிள் செய்யப்பட்ட 03 விசேட மாதிரிக் கார்கள் (All-Terrain Vehicles - ATV) நிறுவனத்தின் தலைவர் திரு.நளீன் வெல்கமவினால் கடற்படைத் தளபதியிடம் (பெப்ரவரி 22) கையளிக்கப்பட்டது.
உயிரிழந்த மற்றும் காயமடைந்த போர்வீரர்களின் இராணுவ குடும்பங்களுக்கு கல்வி நிவாரணம் வழங்கும் நோக்கில் இராணுவ சேவா வனிதா பிரிவினால் ஆரம்பிக்கப்பட்ட 'விரு சிசு பிரதீப' புலமைப்பரிசில் திட்டத்தின் இரண்டாம் கட்டம் இராணுவத் தலைமையகத்தில் (பெப்ரவரி 23) ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இலங்கை தேசிய பாதுகாப்பு ஆய்வுகள் நிறுவனத்தினால் அதன் பணியாளர்களுக்கான தலைமைத்துவ பண்புகளை மேம்படுத்துதல் எனும் தொனிப்பொருளிலான தலைமைத்துவ விரிவுரையொன்று முன்னெடுக்கப்பட்டது.
ஐ.நா. அமைதிகாக்கும் படையின் மாலியில் சேவையாற்றிய இலங்கை இராணுவத்தின் மாரடைப்பால் இறந்த 6 வது இலங்கை இராணுவ சேவைப் படையணியின் லான்ஸ் கோப்ரல் எம்.ஜி.எல் தேசப்பிரிய (42) அவர்களின் பூதவுடல் புதன்கிழமை (பெப்ரவரி 22) பிற்பகல் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டது. அவரது பூதவுடல் பேழை இலங்கை இராணுவ சேவைப் படையணியின் படையினரால் இராணுவ மரியாதையுடன் பெற்றுக் கொள்ளப்பட்டது.
இலங்கை விமானப்படையின் மகளிர் மல்யுத்த வீராங்கனைகள் 74வது தேசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் 2023 போட்டியில் சம்பியனாகத் தெரிவானார்கள்.
மாலியில் உள்ள ஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் பணியின் (மினுஸ்மா) படையினர் (16) வியாழக்கிழமை, 6 வது இலங்கை இராணுவ சேவைப் படையணியைச் சேர்ந்த மறைந்த லான்ஸ் கோப்ரல் எம்.ஜி.எல் தேசப்பிரிய (42) அவர்களின் பூதவுடலுக்கு இராணுவ மரியாதை செலுத்தினர். இவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதனால் மினுஸ்மா பமகோ தளம் – 3 வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது 11 பெப்ரவரி 2023 அன்று காலமானார்.
உடுதும்பர மலைத்தொடரின் கெரண்டியெல்ல மலைஉச்சியில் வழிதவறிய உள்ளூர் சுற்றுலாப் பயணிகள் குழு ஒன்று ஞாயிற்றுக்கிழமை (பெப்ரவரி 19) இலங்கை இராணுவப் படையினரால் மீட்கப்பட்டது.