--> -->
Tamil
2004 ஆம் ஆண்டு 35,000 க்கும் அதிகமான மக்களின் உயிரைக் காவுக்கொண்ட அதிர்ச்சியூட்டும் சுனாமி பேரலையின் 18 வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், 'தேசிய பாதுகாப்பு நாள்' நிகழ்வு இன்று (டிசம்பர் 26) காலை 8.45 மணியளவில் காலி தெல்வத்தையிலுள்ள பெரலிய சுனாமி நினைவிடத்தில் நடைபெற்றது.
இருளை நீக்கி மனிதர்களிடத்தே சுபீட்சத்தை ஏற்படுத்தும் உண்மையான ஒளியின் வருகையையே நத்தார் பண்டிகைக் குறிக்கின்றது.
பாதுகாப்பு செயலாளர் கமல் குணரத்ன இன்று (டிசம்பர் 23) பாமன்கடயில் உள்ள தேசிய மாணவர் படையணி தலைமையகத்திற்கு விஜயமொன்றை மேற்கொண்டார்.
ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் வேந்தராக ஓய்வுபெற்ற ஜெனரல் எஸ்.எச்.எஸ். கோட்டேகொடவை கௌரவ ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் நியமித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகராலயத்தின் ஆசிய மற்றும் பசுபிக் பிராந்திய பணியகத்தின் பணிப்பாளர் திரு. இந்திரிக்க ரத்வத்தை தலைமையிலான பிரதிநிதிகள் பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன அவர்களை சந்தித்தனர்.
இலங்கைக்கான சீன தூதரகம் தேசிய மாணவர் படையணியின் மேம்பாட்டு நடவடிக்கைகளுக்காக 5 மில்லியன் ரூபாவை நன்கொடையாக பாதுகாப்பு அமைச்சிற்கு வழங்கியுள்ளது.
மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 11வது படைப்பிரிவின் 111வது பிரிகேட் படையினரால் அண்மையில் கண்டி ஸ்ரீ சங்கராஜ மாவத்தையில் உள்ள மூன்று மாடி வீடொன்றில் ஏற்பட்ட தீ அணைக்கப்பட்டது.
மோசமான வானிலை காரணமாக எச்.ரி.எம்.எஸ் சுகோதாய் எனும் கப்பல் மூழ்கியதில் ஏற்பட்ட அனர்த்தம் குறித்து இலங்கையின் பாதுகாப்பு அமைச்சு தனது அனுதாபங்களைத் தெரிவித்துள்ளதுடன் காணாமல் போனவர்களின் குடும்பத்தாருக்கும் தாய்லாந்து கடற்படைக்கும் தனது ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறது.
புதிதாக நியமிக்கப்பட்ட கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவை மரியாதை நிமித்தம் சந்தித்தார்.
இலங்கை இராணுவ கொமாண்டோ படைப்பிரிவின் புதிய தலைமையக கட்டிடம் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவினால் இன்று (டிசம்பர் 19) கணேமுல்லையில் உள்ள கொமாண்டோ படைப்பிரிவின் தலைமையகத்தில் திறந்து வைக்கப்பட்டது.
கௌரவ ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள், ரியர் அட்மிரல் பிரியந்த பெரேராவை வைஸ் அட்மிரல் தரத்திற்கு உயர்த்தி, இலங்கை கடற்படையின் (SLN) 25வது தளபதியாக இன்று (18) நியமித்துள்ளார்.
அதிமேதகு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் நேற்று (17) முதல் ஆயுதப்படைகளின் தலைமை தளபதியாக முன்னால் கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன அவர்களை அட்மிரல் பதவிக்கு உயர்த்தியுள்ளார்.
ஒரு தீவு என்ற வகையில் இலங்கை, சர்வதேச உறவுகளைப் பேணும்போது அனைத்து நாடுகளுடனும் நட்புறவுக் கொள்கையை கடைப்பிடிக்க வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் தெரிவித்தார்.
'தீ மற்றும் மீட்புப் பயிற்சி' இலங்கை விமானப்படை தலைமையகத்தில் நடைபெற்றன
பிரபல எழுத்தாளர் ஜே.எப்.ரஞ்சித் பெரேரா எழுதிய ‘விடுதலையின் போர்வையில் பிரபாகரனின் இரக்கமற்ற பயங்கரவாதம்’ என்ற புத்தக வெளியீட்டு விழா நேற்று மாலை (டிசம்பர் 15) கொழும்பில் உள்ள இலங்கை சுற்றுலா மற்றும் ஹோட்டல் முகாமைத்துவக் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
யாழ்ப்பாணம் குருநகர் கடல் பிராந்தியத்தில் வியாழக்கிழமை (டிசம்பர்15) மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது 181 கிலோ கிராமிற்கு மேற்பட்ட கேரள கஞ்சா கடற்படையினரால் நேற்று கைப்பற்றப்பட்டது.
பாதுகாப்பு செயலாளர் கமல் குணரத்ன இன்று (12) கொழும்பு மெனிங் டவுன் மாதா வீதியில் அமைந்துள்ள செனெஹச கல்வி வள ஆராய்ச்சி மற்றும் தகவல் நிலையத்திற்கு (SERRIC) விஜயமொன்றை மேற்கொண்டார்.