பாதுகாப்பு செய்திகள்
சந்தஹிருசேய புனித வஸ்த்துக்கள் செவ்வாயன்று கடம்பே ஸ்ரீ ரஜபவராமயவை சென்றடையும்
சந்தஹிருசேய தூபியின் சூடாமாணிக்கம் மற்றும் கோபுர கலசத்தை ஏந்திய வாகன பவனி நாளை (ஒக்டோபர், 12) கடம்பே ஸ்ரீ ரஜபவராமயவை சென்றடையவுள்ளது.
இராணுவ தினத்தை முன்னிட்டு 567 அதிகாரிகள் மற்றும் 10368 படைவீரர்களுக்கு தர உயர்வு
இலங்கை இராணுவத்தின் 72 வது ஆண்டு நிறைவு தினத்தை (ஒக்டோபர்,10) முன்னிட்டு 567 இராணுவ அதிகாரிகள் மற்றும் 10369 படைவீரர்கள் தரமுயர்த்தப்பட்டுள்ளனர். பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வாவின் பரிந்துரைக்கு அமைவாக அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் இந்த தரமுயர்வு வழங்கப்பட்டுள்ளது.
இராணுவத்தினரால் மேலும் பல நீர்ப்பாசன குளங்கள் புனரமைப்பு
அரசாங்கத்தின் "வாரி செளபாக்யா" திட்டத்தின் கீழ் இலங்கை இராணுவத்தினரால் மகாவலி "எல்" வலயத்தில் காணப்படும் நீர்ப்பாசன குளங்களை புனரமைப்பு செய்யும் பணிகள் அண்மையில் ஆரம்பிக்கப்பட்டன.
இந்திய இராணுவத்தின் மிகப் பெரிய விளையாட்டு குழு இலங்கை வருகை
இந்திய இராணுவம் மற்றும் இலங்கை இராணுவம் ஆகிய இரு தரப்பினர் மத்தியிலும் விளையாட்டு ஆர்வம் , இருதரப்பு உறவுகள் மற்றும் ஒத்துழைப்பு ஆகியவற்றை மேம்படுத்துவதை நோக்கமாக கொண்டு “இராணுவ விளையாட்டு பரிமாற்றம்” திட்டத்தின் கீழ் அடுத்த வாரம் இலங்கைக்கு வரவிருக்கும் 61 பேர் அடங்கிய இந்திய இராணுவ குழாம் நட்பு ஹாக்கி, கூடைப்பந்து, கைப்பந்து மற்றும் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்கவுள்ளது.
யாழ் குடாநாட்டில் கடற்படையினரால் கண்டல் தாவரங்கள் நடுகை
யாழ் தீபகற்பத்தில் உள்ள சதுப்புநிலத்தை பாதுகாத்தல் மற்றும் கடலோர அரிப்பை தடுக்கும் நோக்கில் இலங்கை கடற்படையினரால் அண்மமையல கிலாலி சதுப்பு நிலப்பகுதியில் கண்டல் தாவர கன்றுள் நடப்பட்டது.
இலங்கை மற்றும் இந்திய இராணுவங்களுக்கிடையிலான 'மித்ர சக்தி' கூட்டுப்பயிற்சி
எட்டாவது முறையாக இடம்பெறவுள்ள 'மித்ர சக்தி' கூட்டுப்பயிற்சியில் இந்திய இராணுவத்தின் சார்பில் பங்கேற்கவுள்ள 120 இராணுவ வீரர்கள் அண்மையில் மத்தளை சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தனர். இலங்கை மற்றும் இந்திய இராணுவங்களுக்கிடையிலான வருடாந்த கூட்டுப்பயிற்சி இம்மாதம் 03ம் திகதி முதல் 17ம் திகதி வரை இடம்பெறவுள்ளது.
வழிபாடுகளுக்காக சந்தஹிருசேய புனித வஸ்த்துக்களை ஏந்திய வாகன பவனி
சந்தஹிருசேய தூபியின் சூடாமாணிக்கம் மற்றும் கோபுர கலசத்தை ஏந்திய வாகன பவனி நாளை (ஒக்டோபர், 05) கதிர்காமம் பிரதேசத்தில் அமைந்துள்ள புராதன கிரி வெஹெரவை சென்றடையவுள்ளது.
ஜப்பானிய கடற்படை கப்பல்கள் கொழும்பு துறைமுகத்துக்கு வருகை
ஜப்பானிய கடற்படைக்கு சொந்தமான ககா, முரசமே மற்றும் பியுசுகி ஆகிய 3 நாசகாரி கப்பல்கள் இன்றைய தினம் (ஒக்டோபர் 02) நாட்டிற்கு வருகை தந்துள்ளன. இதற்கமைய, ஜப்பானிய கடற்படைக்கு சொந்தமான குறித்த கப்பல்கள் நல்லெண்ணெ விஜயமொன்றை மேற்கொண்டு கொழும்புத் துறைமுகத்தை வந்த அடைந்துள்ளதாக கடற்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.
12 வருடங்களுக்கு பின்னர் கவசப் படையணியின் களத் துப்பாக்கிச் சுடும் பயிற்சி அமர்வுகள் ஆரம்பம்
கற்பிட்டியிலுள்ள இலங்கை விமானப் படையின் துப்பாக்கிச் சுடும் களப் பயிற்சி தளத்தில், இரண்டு நாள் (செப்டம்பர் 21-22) இளம் கவச படையணி அதிகாரிகளுக்கான பாடநெறி, போர்க்கள கவச வாகன செலுத்துனர்களுக்கான பாடநெறி, துப்பாக்கி பிரயோகம் தொடர்பிலான பாடநெறி ஆகியவற்றை தொடரும் வாய்ப்பு 15 அதிகாரிகள் மற்றும் 130 சிப்பாய்களுக்கு 12 வருடங்களுக்கு பின்னர் மீட்டும் கிடைக்கப்பெற்றுள்ளது.
கடற்படை மற்றும் கடலோர பாதுகாப்பு படையின் உதவியுடன் காயமுற்ற மீனவர் கரைக்கு கொண்டு வரப்பட்டார்
இலங்கை கடற்படை, ஜூலை 26ம் திகதி பலநாள் மீன்பிடிக்காக சென்றிருந்தபோது காயமடைந்த மீனவரை கரைக்கு கொண்டு வந்து மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை மாவட்ட பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தது.
மன்னாரில் 27 மில்லியன் ரூபா பெறுமதியாக கஞ்சா கைப்பற்றப்பட்டது
மன்னார், வலைப்பாடு கடற்பிராந்தியம் மற்றும் அதனை அண்டிய பிரதேசத்தில் நேற்றைய தினம் (செப்டம்பர் 24,) மேற்கொள்ளப்பட்ட விஷேட தேடுதல் நடவடிக்கையின் போது சுமார் 90 கிலோகிராமிற்கும் மேற்பட்ட கஞ்சா கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.
சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட 2350 கிலோகிராம் உலர்ந்த மஞ்சள் இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்டது
வேட்டைகாடு பகுதியில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது நாட்டிற்குள் சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட 2350 கிலோ கிராம் உலர்ந்த மஞ்சள் மற்றும் 50 கிலோகிராம் ஏலக்காய் என்பன இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்டது.