பாதுகாப்பு செய்திகள்
1136 கிலோகிராம் உலர்ந்த மஞ்சளுடன் ஐந்து சந்தேகநபர்கள் கடற்படையினரால் கைது
யாழ்ப்பாணம், குருநகர், மற்றும் சிலாவதுரை, அரிப்பு, ஆகிய கரையோர பிரதேசங்களில் கடற்படையினரால் செப்டம்பர் 09 மற்றும் 10ம் திகதிகளில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட 1136 கிலோகிராமுக்கும் அதிகமான உலர்ந்த மஞ்சளுடன் ஐந்து சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சட்டவிரோதமாக பிடிக்கப்பட்ட சுறாமீனின் பாகங்களை கொண்டுசென்ற லாெறிவண்டி கடலோர பாதுகாப்புப் படையினரால் கைப்பற்றப்பட்டது
சட்டவிரோதமான முறையில் பிடிக்கப்பட்ட சுறா மீன்களின் உடற் பாகங்களை லொறி வண்டியில் கொண்டு செல்வதாக இலங்கை கடலோர பாதுகாப்பு படைக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய குறித்த நடவடிக்கை உடன் சம்பந்தப்பட்ட சந்தேக நபர்கள் ஐவர் கைது செய்யப்பட்டனர்.
முல்லைத்தீவில் இராணுவத்தினரால் பயன்படுத்தப்பட்ட காணி, பிராந்திய அரச அதிகாரிகளிடம் கையளிப்பு
முல்லைத்தீவு, கராச்சி பிரதேச செயலகத்தில் உள்ள பரவிபாஞ்சன் கிராமத்தில் உள்ள 36.8 பெர்ச் காணியை இராணுவம் பிராந்திய அரச அதிகாரகளிடம் அண்மையில் கையளித்தது.
கடலோர பாதுகாப்பு படைவீரர்களுக்கு தீர்ப்பாயம் தொடர்பான பயிற்சிகள்
அண்மையில் மிரிஸ்ஸாவில் உள்ள உயர் பயிற்சி மையத்தில், போதைப்பொருள் மற்றும் குற்றம் தொடர்பான ஐக்கிய நாடுகள் அலுவலகத்தின் உலகளாவிய கடல்சார் குற்றத் தடுப்பு திட்ட அதிகாரிகளினால், இலங்கை கடலோர பாதுகாப்புபடை வீரர்களுக்கு ‘தீர்ப்பாயம் தொடர்பாக பயிற்சி’ அளிக்கப்பட்டன.
கூட்டு ஒருங்கிணைந்த பரிமாற்ற பயிற்சி 02/2021 இனை பூர்த்தி செய்தோருக்கான சான்றிதழ் வழங்கும் வழங்கும் வைபவம் திருகோணமலையில்
கூட்டு ஒருங்கிணைந்த பரிமாற்ற பயிற்சி 02/2021 இன் நிறைவு தின வைபவம் திருகோணமலையில் உள்ள சிறப்பு படகுப்பிரிவு தலைமையகத்தில் செப்டம்பர் 02ம் திகதி நடைபெற்றது. இதில் பயிற்சிநெறியினை வெற்றிகரமாக நிறைவு செய்த படை வீரர்களுக்கான சான்றிதழ் அன்றைய தினம் வழங்கி வைக்கப்பட்டது.
ஐநா நடவடிக்கைகளுக்கு ஆதரவாக அமெரிக்க அரசு வெடிபொருள் செயலிழப்பு உபகரணங்கள் நன்கொடை
ஐ.நாவின் மாலி அமைதி காக்கும் பணிகளில் ஈடுப்பட்டுள்ள இலங்கை இராணுவத்தின் போர்கள போக்குவரத்து குழுவிற்கான வெடிப்பொருள் செயலிழக்கும் கருவிகளை நல்லெண்ண அடிப்படையில் கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் இலங்கை இராணுவத்திடம் நன்கொடையாக வழங்கியது.
களுத்துறை சிறைச்சாலையில் இராணுவத்தினரால் பாதுகாப்பு கேமரா நிறுவப்பட்டது
களுத்துறை சிறைச்சாலையில் இலங்கை இராணுவத்தினரால் பாதுகாப்பு கேமராக்கள் நிறுவப்பட்டுள்ளது. பாதுகாப்பு கேமராக்களை நிறுவும் தொழில்நுட்ப மற்றும் நிபுணத்துவ அறிவைப் பயன்படுத்தி குறித்த கேமராக்கள் பொருத்தப்பட்டு அவைகள் சிறைச்சாலை அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டது.
யாழில் மேலும் இரண்டு வீடுகள் தேவையுடைய குடும்பங்களுக்கு இராணுவத்தினரால் கையளிப்பு
கொல்லங்கல்லடி மற்றும் உடுவில் தெற்குப் பகுதிகளில் இராணுவத்தினரால் நிர்மாணிக்கப்பட்ட மேலும் இரண்டு புதிய வீடுகள் தேவையுடைய இரண்டு குடும்பங்களுக்கு அன்மையில் இராணுவத்தினரால் கையளிக்கப்பட்டது.
41 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சா கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது
பருத்தித்துறை, மணல்காடு கடற்பரப்பில் இன்று (ஓகஸ்ட்,26) கடற்படையினர் நடத்திய விசேட தேடுதல் நடவடிக்கையின்போது சுமார் 139.930 கிலோகிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.
1377 கிலோ உலர்ந்த மஞ்சளை கப்பறபடையினரால் கைப்பற்றப்பட்டது
மன்னார் அரிப்பு கடற்கரையிலும் கல்பிட்டி கடனீரேரி பகுதியிலும் 2021 ஓகஸ்ட் 22, 23 மற்றும் 24 ஆம் திகதிகளில் கடற்படையினால் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது சுமார் 1377 கிலோகிராம் உலர்ந்த மஞ்சள் கைப்பற்றப்பட்டது.
கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக வைத்தியசாலையின் செவி, மூக்கு, தொண்டை சிகிச்சைப்பிரிவு அண்மையில் கோக்லியர் இம்ப்லாண்டேஷன் திட்டத்தை தொடங்கியது.
அதன்படி, அவர்கள் ஒரு வருடமும் ஒன்பது மாதங்களுமான இயற்கையாகவே காது கேளாத குழந்தைக்கு முதல் கோக்லியர் உள்வைப்பு சத்திர சிகிச்சையை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளனர்.
ஒரு மில்லியன் ரூபா பெறுமதியான கஞ்சா கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது
திருகோணமலை, குச்சவெளி, ஜயாநகர் பிரதேசத்தில் நேற்று (ஓகஸ்ட்,21) மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது கடற்படையினரால் சுமார் ஒரு மில்லியன் ரூபாவிற்கு பெறுமதியான கஞ்சா கைப்பற்றப்பட்டது.
உயிர்களை காப்பாற்ற படையினர் இரத்த தானம்
நாட்டில் நிலவும் தொற்றுநோய் சூழ்நிலையில் பொமக்களின் உயிரைக் காப்பாற்றுவதற்காக இலங்கை இராணுவம் மற்றும் இலங்கை விமானப்படை ஆகியவை அண்மையில் யாழ்ப்பாணம் மற்றும் ஹிங்குராகொடவில் இரத்த தான வழங்கும் நிகழ்வினை ஏற்பாடு செய்தன.