பாதுகாப்பு செய்திகள்
சந்தஹிருசேய தூபியின் புனித வஸ்த்துக்கள் சமய கிரிகைகளுக்காக களுத்துறை போதி வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளது
பெளத்த சமய அனுஷ்டானங்களுக்காக கடந்த சில நாட்களாக நாட்டின் சில பாகங்களிலில் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்ட சந்தஹிருசேய தூபியின் சூடாமாணிக்கம் மற்றும் கோபுர கலசம் என்பவற்றை ஏந்திய வாகன பவனி, நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் காரணமாக களுத்துறை போதி வளாகத்தில் சமய கிரிகைகளுக்காக வைக்கப்பட்டுள்ளது.
சந்தஹிருசேய தூபியின் புனித வஸ்த்துக்கள் இன்று பாணந்துரை ரங்கொத் விஹாரையை சென்றடையும்
சந்தஹிருசேய தூபியின் புனித வஸ்துக்களை ஏந்திய வாகன பவனி இன்றையதினம் (ஓகஸ்ட், 20) பாணந்துரை ரங்கொத் விஹாரையை சென்றடையவுள்ளது.
சந்தஹிருசேய தூபியின் புனித வஸ்த்துக்கள் இன்று ஹொரண குருந்துவத்த விஹாரையை சென்றடையும்
சந்தஹிருசேய தூபியின் புனித வஸ்துக்களை ஏந்திய வாகன பவனி இன்று (ஓகஸ்ட், 19) மாலை ஹொரண குருந்துவத்த மஹா விஹாரையை சென்றடையவுள்ளது.
யாழ்ப்பாணத்தில் உயிர் நீத்த இந்திய போர் வீரர்களுக்கு இந்திய சுதந்திர தினத்தன்று அஞ்சலி
விடுதலை புலிகள் அமைப்புக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட “பவன்” நடவடிக்கை மற்றும் 1987 தொடக்கம் 1990 ஆம் ஆண்டு வரையில் இந்திய அமைதிகாக்கும் படையினரால் மேற்கொள்ளப்பட்ட விடுதலை புலிகள் அமைப்புக்கு எதிரான ஏனைய நடவடிக்கைகளின் போது உயிர்நீத்த இந்திய போர் வீரர்களின் நினைவுத் தூபியில் இந்தியாவின் 75 வது சுதந்திரமான 15 ஓகஸ்ட் 2021 அன்று அஞ்சலி செலுத்தப்பட்டது.
இராணுவத்தினரால் கொவிட் நோயாளிகளை பராமரிக்கும் இடைநிலை பராமரிப்பு நிலையம் பிந்துனுவெவவில் ஸ்தாபிப்பு
பண்டாரவெல பிந்துனுவெவ இளைஞர் சேவை மன்றம் கட்டிடம் கொவிட் - 19 நோயாளர்களை பராமரிக்கும் இடைநிலை பராமரிப்பு நிலையமாக இராணுவத்தினரால் மாற்றியமைக்கப்பட்டது.
சந்தஹிருசேய தூபியின் புனித வஸ்த்துக்கள் இன்று அத்தனகல்ல ரஜமஹா விஹாரையை சென்றடையும்
சந்தஹிருசேய தூபியின் புனித வஸ்துக்களை ஏந்திய வாகன பவனி இன்று (ஓகஸ்ட், 18) மாலை அத்தனகல்ல ரஜமஹா விஹாரையை சென்றடையவுள்ளது.
370 கிலோகிராம் உலர்ந்த மஞ்சளுடன் சந்தேகநபர் ஒருவர் கடற்படையினரால் கைது
கற்பிட்டி கிளித்தீவு பகுதியில் சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட 370 கிலோ கிராம் உலர்ந்த மஞ்சளுடன் சந்தேகநபர் ஒருவர் கடற்படையினரால் நேற்று (ஓகஸ்ட்,17) கைது செய்யப்பட்டார்.
புதிய கடற்படை பிரதம அதிகாரி நியமிப்பு
ரியர் அட்மிரல் வைஎன் ஜயரத்ன இலங்கை கடற்படையின் புதிய கடற்படை பிரதம அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் 2021 ஆகஸ்ட், 17 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் கடற்படை பிரதம அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்தினை கண்காணிக்க முப்படை வீரர்கள் கடமையில்
இலங்கை இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை இணைந்து வீதி தடைகள் மூலம் மாகாணங்களுக்கு இடையே பயணக் கட்டுப்பாடுகளை அமல்படுத்தியுள்ளன.
சந்தஹிருசேய தூபியின் புனித வஸ்த்துக்கள் இன்று வட்டாரம ரஜமஹா விஹாரையை சென்றடையும்
சந்தஹிருசேய தூபியின் புனித வஸ்துக்களை ஏந்திய வாகன பவனி இன்றைய தினம் (ஓகஸ்ட், 17) வட்டாரம ஸ்ரீ அரஹந்த மலியதேவ ரஜமஹா விஹாரையை சென்றடையவுள்ளது.
ரூ.6 மில்லியன் பெறுமதியான உலர்ந்த மஞ்சள் இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்டது
மதவாச்சி-மன்னார் வீதியில் ஏற்படுத்தப்பட்டுள்ள இராணுவ சோதனைச் சாவடியில் 1000 கிலோகிராம் உலர்ந்த மஞ்சளுடன் சந்தேக நபர்கள் இருவர் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டனர்.
சந்தஹிருசேய தூபியின் புனித வஸ்துக்கள் வாரியபொல நோக்கி கொண்டு செல்ல திட்டமிடப்பட்டுள்ளது
சந்தஹிருசேய தூபியின் சூடாமாணிக்கம் மற்றும் கோபுர கலசம் என்பவற்றை ஏந்திய வாகன பவனி இன்று காலை (ஓகஸ்ட், 16) நா உயண ஆரண்யவிலிருந்து வாரியபொல ஸ்ரீ விஷுத்தாராம விஹாரையை நோக்கிய தனது பயணத்தை தொடர்ந்தது.
சந்தஹிருசேய தூபியின் புனித வஸ்துக்கள் நா உயன ஆரண்யவை நோக்கி பயணத்தை ஆரம்பித்தது
கட்டுவன ஸ்ரீ மஹிந்த பிரிவெனவில் வழிபாட்டுக்காக வைக்கப்பட்ட சந்தஹிருசேய தூபியின் சூடாமாணிக்கம் மற்றும் கோபுர கலசம் என்பவற்றை ஏந்திய வாகன பவனி இன்று காலை (ஓகஸ்ட், 15) பிரிவெனாவிலிருந்து தனது பயணத்தை தொடர்ந்தது.
சந்தஹிருசேய தூபியின் புனித வஸ்துக்கள் குருணாகல் நோக்கி பயணத்தை ஆரம்பித்தது
தொலங்கமுவ ரஜமஹா விஹாரையில் இடம்பெற்ற சமய அனுஷ்டானங்களைத் தொடர்ந்து சந்தஹிருசேய தூபியின் சூடாமாணிக்கம் மற்றும் கோபுர கலசம் என்பவற்றை ஏந்திய வாகன பவனி இன்று காலை (ஓகஸ்ட், 14) விஹாரையிலிருந்து தனது பயணத்தை தொடர்ந்தது.
சந்தஹிருசேய தூபியின் புனித வஸ்துக்கள் கம்பஹா சாம விஹாரையிலிருந்து பயணத்தை ஆரம்பித்தது
கம்பஹா சாம விஹாரையில் இடம்பெற்ற சமய அனுஷ்டானங்களைத் தொடர்ந்து சந்தஹிருசேய தூபியின் சூடாமாணிக்கம் மற்றும் கோபுர கலசம் என்பவற்றை ஏந்திய வாகன பவனி இன்று காலை (ஆகஸ்ட், 13) விஹாரையிலிருந்து தனது பயணத்தை தொடர்ந்தது.
சந்தஹிருசேய தூபியின் சூடா மாணிக்கமும் கோபுரமும் பொதுமக்கள் வழிபாட்டிற்காக நளை கொரதோட்ட ரஜமஹா விஹாரையில்
சந்தஹிருசேய தூபியின் சூடா மாணிக்கம் மற்றும் கோபுரம் என்பவற்றை ஏந்திய வாகன பவனி நேற்று (ஓகஸ்ட், 08) மாலை பெல்லன்வில ராஜமஹா விஹாரையை வந்தடைந்தது.
கடலோர பாதுகாப்பு படையினரால் 5300 கிலோ கிராம் உலர்ந்த மஞ்சள் கைப்பற்றப்பட்டது
இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட 5372 கிலோ கிராம் உலர்ந்த மஞ்சள், சிலாபம் பகுதியில் வைத்து கைமாற்றப்படும் வேளையில் கடலோர பாதுகாப்பு படையின் சுரக்ஷா கப்பலின் படைவீரர்களினால் கைப்பற்றப்பட்டது.
சந்தஹிரு சேய தூபியின் ‘சூடா மாணிக்கம்’ மற்றும் 'கோபுரம்' ஐ ஏந்திய வாகன பவனி ஆரம்பம்
கொழும்பு, ஹுனுப்பிட்டிய கங்காராம விஹாரையில் இடம்பெற்ற சமய அனுஷ்டானங்களைத் தொடர்ந்து சந்தஹிரு சேய தூபியின் ‘சூடா மாணிக்கம்’ மற்றும் 'கோபுரம்' என்பவற்றை ஏந்திய வாகன பவனி பெளத்த சமய சம்பிரதாயங்களுடன் சுபவேளையில் நாடு தழுவிய தனது பயணத்தை இன்று (ஓகஸ்ட் ,08) ஆரம்பித்தது.
விமானப் படையின் புதுப்பிக்கப்பட்ட ஆளில்லா பறக்கும் விமான ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி திட்டம் அங்குரார்ப்பணம்
கட்டுநாயக்க விமானப்படை தளத்தில் முப்படை தளபதி எயார் மார்ஷல் சுதர்சன பத்திரனவினால் விமானப்படையின் புதுப்பிக்கப்பட்ட ஆளில்லா பறக்கும் விமான ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி திட்டம் அண்மையில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.
இரத்த தானம் வழங்கும் நிகழ்வு படைவீரர்களினால் முன்னெடுப்பு
நாட்டில் நிலவும் தொற்றுநோய் சூழ்நிலையில் இரத்த மாதிரிகளுக்கு ஏற்பட்டுள்ள தேவையை பூர்த்தி செய்வதற்காக விமானப்படை சேவா வனிதா பிரிவினால் நேற்றையதினம் (ஆகஸ்ட் 05) கட்டுநாயக்க விமானப்படை தளத்தில் தேசிய இரத்த மாற்று சேவையுடன் இணைந்து இரத்த தான நிகழ்வொன்று முன்னெடுக்கப்பட்டது.
கற்பிட்டியில் 820 கிலோ கிராம் கடல் அட்டைகள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது
கற்பிட்டி, கீரிமுந்தலம் கடற்கரை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின்போது 16 மில்லியன் ரூபா பெறுமதியான சட்டவிரோதமாக பிடிக்கப்பட்ட 820 கிலோ கிராம் கடலட்டையுடன் சந்தேகநபர்கள் ஏழு பேர் கடற் படையினரால் கைது செய்யப்பட்டனர். குறித்த சந்தேக நபர்கள் பயன்படுத்திய இரண்டு படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.
பிராந்தியத்தின் கடல்சார் பாதுகாப்பை மேலும் ஊக்குவிக்கும் கொழும்பு பாதுகாப்பு மாநாடு
கடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பு தொடர்பான ஐந்தாவது தேசிய பிரதி பாதுகாப்பு ஆலோசகர் மட்ட முத்தரப்பு கூட்டம், இந்தியா, இலங்கை மற்றும் மாலைதீவு நாடுகளது உயர்மட்ட பாதுகாப்பு அதிகாரிகளுக்கிடையே இராணுவ தலைமையகத்தில் நேற்று (ஓகஸ்ட், 04) இடம்பெற்றது.