--> -->
Tamil
இலங்கை இராணுவத்தில் இரண்டாவது உயரிய நியமனமான இராணுவ பிரதம அதிகாரி பதவிக்கு மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேரா நியமிக்கபட்டுள்ளார். ஜூலை 17ம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் அவர் இந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
மேல் மாகாணத்தில் வசிக்கும் 30 வயதுக்கு மேற்பட்ட பொதுமக்கள் தடுப்பூசி பெற்றுக்கொள்வதனை இலகுவாக்கும் வகையில் இன்று (ஜூலை, 15) முதல் கொழும்பு விஹார மகா தேவி பூங்கா திறந்த வெளியரங்கில் புதிய தடுப்பூசி நிலையம் ஒன்று இராணுவத்தினரால் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.
கொட்டியாகந்துர, குடாஓயா பகுதியில் மத்திய பாதுகாப்பு படை தலைமையகத்தின் கீழ் உள்ள 12வது பிரிவின் படைவீரர்கள் பொலிஸாருடன் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது சட்டவிரோதமாக பயிரிடப்பட்டிருந்த கஞ்சா செய்கை பிடுங்கி அழித்தொழிக்கப்பட்டது.
சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையின் மூலம் பிடிக்கப்பட்ட தடைசெய்யப்பட சுறா மீன் சதைகள் 27 கிலோகிராமை வைத்திருந்ததன் பேரில் மீன்பிடி படகு ஒன்றுடன் சந்தேகநபர்கள் ஐவர் கடலோர பாதுகாப்பு படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட 4 மில்லியன் ரூபா பெறுமதியான 672 கிலோகிராம் உலர்ந்த மஞ்சள் மன்னார் பெரியகடை கரையோர பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது இராணுவத்தால் கைப்பற்றப்பட்டது.
ஆசிரியர்களுக்கு தடுப்பூசியேற்றும் நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை அளிக்கும் ஜனாதிபதியின் அறிவுறுத்தல்களுக்கு இணங்க, இலங்கை இராணுவ மருத்துவ குழுக்கள் அண்மையில் மஹரகம தேசிய கல்வி நிறுவகத்தின் 350 க்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு தடுப்பூசியேற்றப்பட்டன.
குட்டிக்கல பிரதேசத்தில் சுமார் 5 ஏக்கர் நிலப்பரப்பில் பயிரிடப்பட்டிருந்த மஞ்சள் செய்கை இராணுவத்தின் 1வது பொது சேவைகள் படையணி வீரர்களால் அறுவடை செய்யப்பட்டது.
திருகோணமலை சிற்றாறு பிரதேசத்தில் அண்மையில் சட்டவிரோதமாக மணல் அகழ்வில் ஈடுபட்ட 18 பேர் இராணுவத்தின் உதவியுடன் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டனர்.
தியதலாவையில் உள்ள 1வது பொது சேவைகள் படையினரால் சேதனப் பசளை உற்பத்தி செய்யும் நடவடிக்கைகள் இராணுவத்தின் பொது சேவைகள் படையணியின் கேர்ணல் நிலை கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் சந்தன ஹந்துமுள்ளவின் வழிகாட்டுதலின் கீழ் ஆரம்பிக்கப்பட்டது.
பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரியும், இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வாவின் வழிகாட்டுதல்களுக்கமைய இலங்கை இராணுவம் கிளிநொச்சியில் தேவையுடைய மக்களுக்கு வீடுகள் நிர்மாணிக்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
அண்மையில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த 152 மீன்பிடி படகுகள் மற்றும் பிற மீன்பிடி உபகரணங்களுடன் 442 பேரை இலங்கை கடற்படை கைது செய்தது.
அமெரிக்காவை தளமாகக் கொண்ட தர்ம விஜய அறக்கட்டளை மற்றும் பெளத்த விஹாரை ஆகியன இணைந்து கொவிட் -19 கட்டுப்பாட்டு பணிகளுக்காக இலங்கைக்கு நேற்று (ஜூலை 01) ஒரு தொகை மருத்துவ சாதனங்கள் மற்றும் உபகரணங்களை அன்பளிப்பாக வழங்கியுள்ளது.
மன்னார், அச்சங்குளம்,நறுவிலிக்குளம் மற்றும் சவுத் பார் பிரதேசங்களில் ஜூன் 29,30 மற்றும் ஜூலை 01ம் திகதிகளில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கைகளின் போது சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட 2021.4 கிலோ கிராம் உலர்ந்த மஞ்சளுடன் ஆறு சந்தேக நபர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.
அம்பகமுவ மற்றும் தனமல்வில பிரதேசங்களில் சட்டவிரோதமான முறையில் மேற்கொள்ளப்பட்ட கஞ்சா செய்கை இராணுவத்தினரால் சுற்றி வளைக்கப்பட்டு அவை பொலிஸாரின் மேற்பார்வை கீழ் அழிக்கப்பட்டன.
இலங்கைக்கான இந்திய பிரதி உயர் ஸ்தானிகர் திரு வினோத் ஜேக்கப், இலங்கை கடலோர பாதுகாப்புப்படை பிராந்திய தலைமையகத்திற்கு விஜயம் மேற்கொண்டார். இதன் போது அவர் இலங்கை கடலோர பாதுகாப்பு படைக்கு சொந்தமான சுரக்ஷா கப்பலுக்கான உதிரிபாகங்களை உத்தியோக பூர்வமாகக் கையளிக்கும் நிகழ்விலும் கலந்து கொண்டார்.
அண்மையில் நடைபெற்ற ‘76 வது செஸ் மியோர் நினைவு தடகள சாம்பியன்ஷிப் விளையாட்டு போட்டிகளில்’ இலங்கை இராணுவ விளையாட்டு வீரர்கள் தமது திறமைகளை வெளிப்படுத்தி பல்வேறு விளையாட்டுகளில் பதக்கங்களை வென்று இராணுவத்துக்கும், நாட்டுக்கும் கௌரவத்தை பெற்றுக் கொடுத்துள்ளனர்.
இராணுவத்தினரால் திருத்தி அமைக்கப்பட்ட 12 லேண்ட் ரோவர் ரக வாகனங்கள் பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வாவிடம் வைபவ ரீதியாக கையளிக்கப்பட்டது.
கொவிட் - 19 பரவலை தடுக்கும் வகையில் இராணுவத்தினரால் வவுனியா பிரதேசத்தில் பொது மக்கள் ஒன்று கூடும் இடங்களில் கிருமி தொற்று நீக்கம் செய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.