பாதுகாப்பு செய்திகள்
நாட்டின் சில பாகங்களில் மழையுடனான காலநிலை தொடரும் - வளிமண்டலவியல் திணைக்களம்
நாட்டின் வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் தற்போது காணப்படும் மழையுடனான வானிலை அடுத்த சில நாட்களுக்கு தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 31,338 ஆக உயர்வு
கடந்த 24 மணித்தியாலங்களில் வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 551 பேர் புதிதாக அடையாளம் காணப்பட்டதை அடுத்து நாட்டின் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 39,781 ஆக அதிகரித்துள்ளதாக கொவிட்-19 பரவல் தடுப்பு செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
வைரஸ் தொற்றுக்குள்ளான 618 பேர் நேற்றைய தினம் குணமடைவு
கடந்த 24 மணித்தியாலங்களில் வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 428 பேர் புதிதாக அடையாளம் காணப்பட்டதை அடுத்து நாட்டின் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 38,058ஆக அதிகரித்துள்ளதாக கொவிட்-19 பரவல் தடுப்பு செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
நாட்டில் சில பாகங்களில் பலத்த மழை பெய்யக்கூடும் - வளிமண்டலவியல் திணைக்களம்
கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை, முல்லைத்தீவு, கிளிநொச்சி, மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாட்டில் 13,860 பீசீஆர் பரிசோதனைகள் நேற்று முன்னெடுப்பு
கடந்த 24 மணித்தியாலங்களில் வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 370 பேர் புதிதாக அடையாளம் காணப்பட்டதை அடுத்து நாட்டின் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 37,630ஆக அதிகரித்துள்ளதாக கொவிட்-19 பரவல் தடுப்பு செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
மல்லாவியில் 3 பேரின் சடலங்கள் மீட்பு
மல்லாவி வவுனிக்குளம் வாவியில் விழுந்த ஜீப் வண்டியில் பயணித்தவர்களில் ஒருவரை உயிருடனும் மூவரை சடலமாகவும் படையினர் மீட்டுள்ளனர்.
வைரஸ் தொற்றிலிருந்து குனமடைந்தவர்களின் எண்ணிக்கை 715 ஆக பதிவு
கடந்த 24 மணித்தியாலங்களில் வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 594 பேர் புதிதாக அடையாளம் காணப்பட்டதை அடுத்து நாட்டின் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 37,260 ஆக அதிகரித்துள்ளதாக கொவிட்-19 பரவல் தடுப்பு செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இலங்கை கடற்படையினரால் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட என்95 முகக்கவச கதிர்வீச்சு இயந்திரம்
இலங்கை கடற்படையின் தொழிநுட்ப நிபுணத்துவத்தின் மூலம் என்95 முகக்கவச கதிரியக்க இயந்திரம் ஒன்று கடற்படையினரால் உள்நாட்டில் தயாரிக்கப்பட்டுள்ளது.
வைரஸ் தொற்றிலிருந்து குனமடைந்த 491 பேர் வைத்தியசாலையில் இருந்து வெளியேறினர்
கடந்த 24 மணித்தியாலங்களில் வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 618 பேர் புதிதாக அடையாளம் காணப்பட்டதை அடுத்து நாட்டின் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 36,666 ஆக அதிகரித்துள்ளதாக கொவிட்-19 பரவல் தடுப்பு செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இராணுவத்தின் புதிய பிரதம அதிகாரி கடமைகளை பொறுப்பேற்பு
இலங்கை சமிக்ஞை படையணியின் கேர்னல் கொமடாண்ட் மேஜர் ஜெனரல் பிரபாத் தெமடன்பிட்டிய, இராணுவத்தின் 56வது பிரதம அதிகாரியாக தனது கடமைகளை இராணுவத் தலைமையகத்தில் நேற்றைய தினம் பொறுப்பேற்றுக் கொண்டார்.
இராணுவ சேவா வனிதா பிரிவு தனக்கென முகநூல் பக்கத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
இலங்கை இராணுவத்தின் சேவா வனிதா பிரிவு தனது உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இது தொடர்பான நிகழ்வு ஜயவர்தனபுரயிலுள்ள, இராணுவ தலைமையகத்தில் அமைந்துள்ள இலங்கை இராணுவ சேவா வனிதா அலுவலகத்தில் நேற்று பிற்பகல் (டிச. 15 ) நடைபெற்றது.