--> -->
Tamil
இலங்கை விமானப்படைக்கு சொந்தமான இலகரக பயிற்சி விமானம் கந்தளாய், சூரியபுர பிரதேசத்திலுள்ள வயல் காணியில் இன்று (15) விழுந்து விபத்துக்குள்ளானது.
ரணவிரு சேவா அதிகார சபைக்கு நிதி உதவிகள் வழங்கி வைக்கும் நிகழ்வு முன்னாள் இராணுவத் தளபதியும் இந்நாள் இலங்கை துறைமுக அதிகார சபையின் தலைவருமான ஜெனரல் (ஓய்வு) தயா ரத்நாயக்கவின் தலைமையில் இடம்பெற்றது.
மன்னார் பள்ளிமுனை பகுதியில் வீடு ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 1560 கிலோ கிராம் உலர்ந்த மஞ்சளினை வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் மன்னாரை தளமாகக் கொண்டுள்ள 54 ஆவது படைப்பிரிவின் படைவீரர்கள் கைப்பற்றியுள்ளனர். சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட இந்த மஞ்சளுடன் சந்தேக நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
சின்ன சிப்பிகுளம் பகுதியில் இராணுவத்தின் 213 ஆவது பிரிகேட் படையினரால் சுமார் 300ற்கு மேற்பட்ட வேம்பு, நாகை, மா ஆகிய மரங்கள் நடுகை செய்யப்பட்டன.
இலங்கை இராணுவம் சீகிரிய, கிம்பிஸ்ஸ பிரதேசத்தில் தேவையுடைய குடும்பம் ஒன்றுக்கு புதிதாக வீடொன்றை நிர்மாணித்துள்ளது.
கடந்த 24 மணித்தியாலங்களில் வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 538 பேர் புதிதாக அடையாளம் காணப்பட்டதை அடுத்து நாட்டின் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 30,612 ஆக அதிகரித்துள்ளதாக கொவிட்-19 பரவல் தடுப்பு செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
கடந்த 24 மணித்தியாலங்களில் வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 697 பேர் புதிதாக அடையாளம் காணப்பட்டதை அடுத்து நாட்டின் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 30,074 ஆக அதிகரித்துள்ளதாக கொவிட்-19 பரவல் தடுப்பு செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
‘இது உங்கள் கடற்படை’ மற்றும் ‘உங்கள் கடற்படையை அறிந்து கொள்ளுங்கள்’ என்ற கருப்பொருளின் கீழ், கடற்படையின் 70 வது ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு கொண்டு இலங்கை கடற்படையின் மூலதனக் கப்பல்கள் காலிமுகத்திடல் கடற்பரப்பில் நங்கூரமிடப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
தென் சூடான் குடியரசில் அமைதி காக்கும் பணியில் ஈடுபட்டுள்ள ஐக்கிய நாடுகள் அமைதிகாக்கும் படையில் 5வது படைக் குழுவில் இணைந்து கொள்ளவுள்ள இலங்கை விமானப்படையின் 2வது குழுவினர் நாட்டிலிருந்து இன்று பயணமானார்கள்.
சூரிய சக்தி, காற்று மற்றும் நீர் மின் உற்பத்தி திட்ட அபிவிருத்தி அமைச்சர் கெளரவ . துமிந்த திசானாயக்க விஷேட கதிரியக்க பொருள் கண்டறிதல் மற்றும் கதிரியக்க அளவீட்டு கருவி தொகுதி ஆகியவற்றை இலங்கை விமானப்படைக்கு வழங்கி வைத்தார்.
கடந்த 24 மணித்தியாலங்களில் வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 798 பேர் புதிதாக அடையாளம் காணப்பட்டதை அடுத்து நாட்டின் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 29,377 ஆக அதிகரித்துள்ளதாக கொவிட்-19 பரவல் தடுப்பு செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
வடக்கு, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் அனுராதபுரம் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இத்தாலியிலிருந்து நாடு திரும்பி பலாலியில் உள்ள இலங்கை விமானப்படை தனிமைப்படுத்தல் மையத்தில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்ட 89 பேர் தனிமைப்படுத்தல் காலத்தை கால பூர்த்தி செய்த தன் பின்னர் நேற்றய தினம் தமது வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.