--> -->
மிரிசவெட்டிய ரஜமஹா விகாரையின் பிரதம விகாராதிபதி வண. ஈத்தல்வெட்டுனவெவ குணதிலக்க தேரரினால் வன்னி பாதுகாப்பு படை கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேராவிற்கு10 டிஜிட்டல் உடல் வெப்பமானிகளை பெற்றுக் கொடுக்க அனுசரனை வழங்கினார்.
மேலும், கட்டார் விமான சேவைக்குச் சொந்தமான QR 668 விமானத்தின் மூலம் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த மூன்று இலங்கை பிரஜைகள் தனிமைப்படுத்தல் செயற்பாடுகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக இம் மத்திய நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.
கிளிநொச்சி கிருஷ்ணபுரம் பகுதியில் நிர்மாணிக்கப்பட்டு வரும் தீவிர சிகிச்சை வைத்தியசாலையின் நிர்மாணப் பணிகளை கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தின் தலைவரும் பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரியும் இராணுவத் தளபதியுமான லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா பார்வையிட்டார்.
கொரோனா வைரஸ் பரவல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதையடுத்து அதனை குறைக்கும் வகையில் முல்லைத்தீவு உடையார்கட்டு மற்றும் புதுக்குடியிருப்பு பிரதேசங்களில் உள்ள பொது இடங்களில் படையினரால் தொற்று நீக்கம் செய்யும் பணிகள் முன்னெடுக்கப்பட்டது.
வடமேற்கு மற்றும் வடமத்திய கடற்படை கட்டளையாகத்தின் கடற்படை வீரர்களினால் கடந்த இரண்டு நாட்களாக முன்னெடுக்கப்பட்ட பல்வேறு சோதனை நடவடிக்கைகளின் போது சுமார் 4,150 கிலோகிராம் உலர்ந்த மஞ்சள் கைப்பற்றப்பட்டது. சட்டவிரோதமாக மஞ்சள் கடத்தலில் ஈடுபட்ட 16 சந்தேக நபர்களும் இதன்போது கைது செய்யப்பட்டனர்.
தர இறக்கம் செய்யப்பட்ட இலங்கை கடற்படைக்கு சொந்தமான 'வீரயா' மற்றும் 'ஜகத்தா' ஆகிய இரு கப்பல்கள் கடல் வாழ் உயிரினங்கள் மற்றும் மீனினங்கள் இனப்பெருக்கம் செய்யும் தளமாக பயன்படுத்த வகையில் திருகோணமலை கடலுக்கு அடியில் மூழ்கடிப்புச் செய்யப்பட்டது.
Tamil
கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 633 பேர் நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டதையடுத்து நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களில் மொத்த எண்ணிக்கை 10,424 ஆக உயர்வடைந்துள்ளது சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 586 பேர் நேற்றைய தினம் புதிதாக அடையாளம் காணப்பட்டதையடுத்து நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 9,791 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
ஊவா, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை, முல்லைத்தீவு மற்றும் வவுனியா மாவட்டங்களிலும் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் பரவல் தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கையை முன்னெடுக்கும் வகையில் இராணுவத்தின் 231வது பிரிகேட் படைவீரர்களினால் வெலிகந்த பிரதேசத்தில் உள்ள சமூக தலைவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு முகக் கவசங்கள் வழங்கி வைத்தனர்.
புதிதாக கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளான 335 பேர் நேற்றைய தினம் புதிதாக அடையாளம் காணப்பட்டதையடுத்து நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 9, 205ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
பொதுமக்கள் அனாவசியமாக பீதியடைவதற்கான அல்லது பொருட்களை பொருட்களை கொள்வனவு செய்வது களஞ்சியப்படுத்தி வைப்பதற்கான ஒரு அவசியமும் கிடையாது எனவும் வைரஸ் பரவலைத் தடுக்க நெரிசலான கூட்டங்களைத் தவிர்ந்து கொள்ளுமாறும் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். நேற்று மாலை கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையத்தில் கொரோனா வைரஸ் பரவல் தொடர்பான தகவல்களை ஊடகங்களுக்கு தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தனிமைப்படுத்தல் நிலையங்களில் தனிமைப்படுத்தல் உட்படுத்தப்பட்ட மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலை கொத்தணியில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 130 பேர் குணமடைந்துள்ளதாக கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 541 பேர் நேற்றைய தினம் புதிதாக அடையாளம் காணப்பட்டதையடுத்து நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 8,413 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இவ்வாறு அடையாளங் காணப்பட்ட அனைவரும் உள் நாட்டுப் பிரஜைகள் என அப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.
கடத்தலுக்கு தயாரான நிலையில் பேசாலை, ஒலுத்துடுவை கடற்கரையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 26.9 கிலோகிராம் கேரள கஞ்சாவை இராணுவத்தினர் கைப்பற்றியுள்ளனர்.
புதிதாக தொற்றுக்கு உள்ளான மேலும் 351 பேர் அடையாளம் காணப்பட்டதையடுத்து நாட்டின் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 7,872 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை, முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது
கொழும்புக் கோட்டை, புறக்கோட்டை, பொரள்ளை மற்றும் வெலிக்கடை போலீஸ் பிரிவுகளில் இன்று மாலை 6 மணி முதல் மறு அறிவித்தல் வரை தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் சிலர் அடையாளம் காணப்பட்டதையடுத்து நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று உள்ளவர்களின் எண்ணிக்கை 7521 ஆக அதிகரித்துள்ளது....
கொழும்பு மாவட்டத்தின் கொத்தடுவ மற்றும் முல்லேரியா பொலிஸ் பிரிவுகளில் நேற்று மாலை 7.00 மணி முதல் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுல் படுத்தப்பட்டு உள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மற்றுமொரு நபர் இன்றைய தினம் உயிரிழந்ததையடுத்து இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 15 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா வைரஸுக்கு சிகிச்சையளிக்கும் வைத்தியசாலையாக மாற்றப்பட்டுள்ள தனிமைப் படுத்தல் மையத்தை இராணுவத்தினர் சுகாதார அதிகாரிகளிடத்தில் நேற்று கையளித்தனர்.