கம்பஹா மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள புதிய கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இராணுவத்தின் 71ஆவது ஆண்டு விழா நிகழ்வுகள் அனைத்தும் உடன் அமுலுக்கு வரும் வகையில் தற்காலிகமாக இரத்து செய்யப்பட்டுள்ளன.
கொவிட்-19 கொரோனா வைரஸ் பரவுதலை தடுக்கும் வகையில் பொலிஸாரால் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் தொடர்பான உத்தியோகபூர்வ தகவல்களை பெற்றுக்கொள்ளலவும் பொலிஸ் தொடர்பான ஏனைய தகவல்களை பெற்றுக் கொள்ளவும் பின்வரும் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளை தொடர்பு கொள்ளுமாறு பொலிஸ் தலைமையகம் கேட்டுக்கொண்டுள்ளது.
கம்பஹா மற்றும் களனி பொலிஸ் பிரிவுகளில் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல் படுத்தப்பட்டுள்ளதாக அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாட்டில் மீண்டும் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஆட்பதிவு திணைக்களத்தின் பிரதான தலைமையகம் மற்றும் பிராந்திய காரியாலயங்களின் ஊடாக எதிர்வரும் 7,8 மற்றும் 9ம் திகதிகளில் மட்டுப்படுத்தப்பட்ட சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக ஆட்பதிவு திணைக்களம் தெரிவித்துள்ளது.
மினுவாங்கொடை கொரோனா வைரஸ் தொற்று சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் 466 தொற்றாளர்கள் இன்றைய தினம் அடையாளம் காணப்பட்டதையடுத்து தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 569 ஆக அதிகரித்துள்ளது.
வேயாங்கொடை பொலிஸ் பிரிவில் இன்றுமுதல் ( ஒக்டோபர், 04)உடன் அமுலுக்கு வரும் வகையில் மறு அறிவித்தல் வரை தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல் படுத்தப்பட்டுள்ளதாக அரச தகவல் திணைக்களம் தெரிவிக்கின்றது.
கம்பஹா மாவட்டத்தில் வேயாங்கொடை பொலிஸ் பிரிவில் இன்றுமுதல் ( ஒக்டோபர், 04) உடன் அமுலுக்கு வரும் வகையில் மறு அறிவித்தல் வரை தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல் படுத்தப்பட்டுள்ளது.
Tamil
முப்படைகள்,பொலிஸ் மற்றும் சிவில் பாதுகாப்பு திணைக்களத்தில் சேவையில் ஈடுபட்ட சமயம் உயிர்நீர்த்த, அங்கவீனமுற்ற மற்றும் ஓய்வுபெற்ற படைவீரர்களின் குடும்ப உறுப்பினர்களின் நலன்புரி நடவடிக்கைகளை கருத்திக்கொண்டு ரணவிரு சேவை அதிகார சபையினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நடமாடும் சேவை மற்றும் உத்தம பூஜா பிரணாம பதக்கம் வழங்கும் நிகழ்வு 2020 ஒக்டோபர் மாதம் 03 திகதி காலை 0800 மணி முதல் மாலை 0500 மணி வரை பாதுகாப்பு செயளாலர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன அவர்களின் தலைமையில் சாலியபுர கஜபா ரெஜிமன்ட் தலைமையகத்தில் நடைபெறுவதற்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்திசெய்யப்பட்டுள்ளன.
இலங்கை இராணுவத்தின் 221 படைப்பிரிவினால் திருகோணமலை மாவட்டத்தில் தேவையுடைய பொதுமக்களுக்கு 49 செயற்கை கால்கள் அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது. அண்மையில் திருகோணமலை நகர மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வின் போதே இவ்வாறு அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது.
இலங்கை இராணுவத்தினரால் தயாரிக்கப்பட்ட ஒன்பது நவீன யுனிபஃபெல்ஸ் கவச வாகனங்கள் உட்பட ஒரு புதிய மீட்பு வாகனம் மற்றும் மூன்று கொள்கலன்கள் ஆகியன, மாலி நாட்டில் உள்ள (மினுஸ்மா) ஐக்கிய நாட்டு சமாதான அமைதிகாக்கும் பணிகளுக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளதுடன், அவை அந்நாட்டிலுள்ள கடினமான நிலப்பரப்புகளில் பரீட்சாத்த நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றன.
சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட 205 கிலோ கிராம் உலர்ந்த மஞ்சள் மற்றும் 104 கிலோகிராம் கேரள கஞ்சா என்பவற்றை இராணுவத்தினர் நேற்று கைப்பற்றினர்.
காலி கின் கங்கைக்கு குறுக்காக அமைக்கப்பட்டுள்ள தொடங்கொடை மற்றும் வக்வெல்ல பாலங்களுக்கு அடியில் தேங்கியுள்ள குப்பைகளினால் ஏற்பட்டுள்ள அடைப்பினை நீக்கும் பணியினை கடற்படையினர் முன்னெடுத்துள்ளனர்.
அங்கவீனமுற்ற போர் வீரர்களின் செயற்கை கை, கால்களை திருத்தியமைக்கவும் மற்றும் பழுதுபார்க்கவும் இரண்டு சிறிய செயற்கை அவையவங்கள் பிரிவு அண்மையில் நிறுவப்பட்டுள்ளது.
இன்று காலை (செப்டம்பர், 20) கண்டி பூவெலிகடை பிரதேசத்தில் இடம்பெற்ற மண்சரிவின் பின்னர் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கி காயமுற்ற மூவரை இராணுவத்தினர் மீட்டுள்ளனர்.
கடல்சார் வானிலை முன்னறிவிப்பின் பிரகாரம், செப்டெம்பர் மாதம் 18 ஆம் திகதி தொடக்கம் மத்திய, வடகிழக்கு மற்றும் கிழக்கு வங்காள விரிகுடா பிரதேசங்களில் கடும் காற்று வீசக்கூடிய சூழ்நிலை காணப்படுவதால், மீனவர் சமூகம் இது தொடர்பில் மிகவும் அவதானமாக இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மன்னார் வடக்கு கடற்பரப்பினூடாக நாட்டுக்குள் சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட 818 கிலோ கிராம் உலர்ந்த மஞ்சளினை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர். இதற்கமைய 17 சாக்குப் பைகளில் பொதி செய்யப்பட்ட உலர் மஞ்சளினையும் அதனை நாட்டுக்குள் கொண்டு வர பயன்படுத்தப்பட்ட டிங்கி படகினையும் கடற் படையினர் கைப்பற்றினர்.
கொழும்பு புறநகர் பகுதிகளில் நேற்றைய தினம் முதல் (15) அமுல்படுத்தப்பட்டுள்ள வீதி ஒழுங்கை சட்டத்திற்கேற்ப வாகனங்களின் நகர்வுகளை கண்காணிக்க பொலிஸாருக்கு உதவும் வகையில் ட்ரோன் கருவிகளை பயன்படுத்தும் திட்டம் விமானப்படையினரால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் ராஜகிரிய, நுகேகொடை, பொரல்லை, காலி வீதி ஆகிய பிரதான வீதிகளில் விமானப் படையினரின் ட்ரோன் கருவிகள் கண்காணிப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
நாடு முழுவதிலும் உள்ள 51 இராணுவ பயிற்சி மையங்களில் திங்கட்கிழமை ஆரம்பமான பட்டதாரிகளை ஒருநிலைப்படுத்தும் பயிற்சித் திட்டத்தின் முன்னேற்றம் தொடர்பாக ஆராய, இராணுவ தளபதி லெப்டினென்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா பனாகொடை இராணுவ வளாகத்தில் அமைந்துள்ள இராணுவப் பயிற்சி மையத்திற்கு நேற்றைய தினம் (15) விஜயமொன்றை மேற்கொண்டார்.
புதுக்குடியிருப்பு, உயிலங்குளம் பகுதியில் கேரள கஞ்சா மற்றும் உலர் மஞ்சள் என்பவற்றை சட்டவிரோதமாக கடத்திச் செல்ல முற்பட்ட நால்வரை விஷேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். குறித்த பிரதேசத்தில் இருந்து லொரி மற்றும் உழவு இயந்திரம் என்பவற்றின் மூலம் கொண்டு செல்லப்படவிருந்த 52 கிலோ கிராமுக்கு மேற்பட்ட கேரளா கஞ்சா மற்றும் 920 கிலோ கிராமுக்கு மேற்பட்ட உலர்ந்த மஞ்சள் என்பன விஷேட அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டது.
சேதமடைந்த எம்டி நியூ டயமண்ட் கப்பல் தொடர்பாக தங்கள் கருத்துக்களை சமர்ப்பிக்குமாறு அனைத்து கடல்சார் பங்குதாரர்களுக்கும் சட்டமா அதிபர் திணைக்களம் உத்தரவிட்டுள்ளதாக இன்று (14) இடம்பெற்ற கடல்சார் பங்குதாரர்களுக்கு இடையிலான சந்திப்பின் போது கடல்சார் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகார சபையின் (MEPA) தலைவி தர்ஷனி லஹந்தபுர தெரிவித்தார்.
வெளிநாட்டில் இருந்து வருகைதந்த இலங்கையர் ஒருவர் கொரோனா வைரஸ் காரணமாக சிலாபம் தள வைத்தியசாலையில் உயிரிழந்ததை அடுத்து இலங்கையில் கொரோனா மரண எண்ணிக்கை 13 ஆக அதிகரித்துள்ளது.
போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள வீதி ஒழுங்கை சட்டம் நாளை (14) முதல் மேல் மாகாணத்தில் அமுல்படுத்துவதற்கு, பொலிஸார் தீர்மானித்துள்ளனர்.