பாதுகாப்பு செய்திகள்

செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

2,996 பேர் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்

இறுதியாக 13 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியதை அடுத்து,


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

கடல்சார் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகாரசபை எம் ரீ நியூ டயமன் கப்பலின் நிலைமை குறித்து ஆராய்வு

இலங்கை கடற்படையினருடன் இணைந்து அதன் மீட்பு நடவடிக்கைகளுக்கு நியமிக்கப்பட்ட நிபுணர்கள்  எம்ரீ நியூ டயமண்ட் கப்பல் தொடர்பான தற்போதைய நிலைமைகள் தொடர்பாக ஆராயும் பொருட்டு சுழியோடல் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாக கடல்சார் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகாரசபையின் தலைவி தர்ஷனி லஹண்டபுற இன்று (11) தெரிவித்தார்.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

லான்ஸ் கோப்ரல் அபேகோன் தெற்காசிய போட்டியில் சாதனை

ஜேர்மன் நாட்டின் டிசாசு நகரில் இம்மாதம் (செப்டம்பர்) 8ஆம் திகதி இடம்பெற்ற சர்வதேச தடகள போட்டியில் இலங்கை இராணுவ வீரரான லான்ஸ் கோப்ரல் யுபுன் அபேகோன் 100 மீற்றர் ஓட்டப் போட்டியினை 10.16 செக்கன் வேகத்தில் ஓடி முடித்து தேசிய ரீதியில்  சாதனையை நிலை நாட்டியுள்ளார்.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

எம்ரீ நியூ டயமண்ட் கப்பல் 50 கடல் மைல் தொலைவிற்கு அப்பால் -கடற்படை தெரிவிப்பு

நிர்கதிக்குள்ளாகியுள்ள எம்ரீ நியூ டயமண்ட் கப்பல் கல்முனை துறையில் இருந்து 50 கடல் மைல் தொலைவிற்கு அப்பால் இழுத்துச்செள்ளப்பட்டுள்ளதாக கடற்படை பேச்சாளர் கெப்டன் இந்திக டி சில்வா  இன்று (10) தெரிவித்துள்ளார்.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

கொழும்பு இராணுவ வைத்தியசாலையில் பீ சீ ஆர் பரிசோதனைகளுக்கான புதிய ஆய்வுகூடம் திறந்து வைப்பு

கொழும்பு இராணுவ வைத்தியசாலையில் தொற்று நோய் மூலக்கூறினை கண்டறியும் புதிய ஆய்வக்கூடம் ஒன்று நேற்று (8) திறந்துவைக்கப்பட்டது. இதன்மூலம் இலங்கையில் நாளாந்தம் மேற்கொள்ளப்படும் பீ சீ ஆர் பரிசோதனைகளின் எண்ணிக்கையினை மேலும் 300ஆல் அதிகரிக்கமுடியும் என தெரிவிக்கப்படுகிறது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

எம்ரீ நியூ டயமண்ட் கப்பலில் தீப்பிழம்புகளோ அல்லது புகையோ ஏற்படவில்லை - கடற்படை தெரிவிப்பு

நிர்கதிக்குள்ளாகியுள்ள எம்ரீ நியூ டயமண்ட் கப்பலிலிருந்து இன்று (09)  எதுவித தீப்பிழம்புகளோ அல்லது புகையோ அவதானிக்கப்படவில்லை இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

 


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

எம்ரீ நியூ டயமண்ட கப்பலில் ஏற்பட்டுள்ள தீயினை அணைக்க விமான மற்றும் கடற்படையினர் தீவிர போராட்டம்

தற்போதுள்ள காற்றுடன் கூடிய வானிலை மற்றும் தொடர் தீயணைப்பு நடவடிக்கைகளுக்கு மத்தியில் உலர் இரசாயன கலவைகளை வீசுவதன் மூலம் எம்ரீ நியூ டயமண்ட் கப்பலில் ஏற்பட்டுள்ள தீ, ஏனைய பகுதிகளுக்குப் பரவாமல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக கடற்படை பேச்சாளர் கெப்டன் இந்திக டி சில்வா தெரிவித்தார்.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

10 கிலோ தங்கத்தை கடத்தும் முயற்சி விசேட அதிரடிப்படையினரால் முறியடிப்பு

புத்தளத்தில் 10 கிலோ கிராம் எடையுடைய தங்கத்தை கடத்த மேற்கொண்ட முயற்சி விசேட அதிரடிப்படையினரால் முறியடிக்கப்பட்டுள்ளது. கார் ஒன்றின் மூலம் கொண்டு செல்லப்படவிருந்த குறித்த தங்கத்தை அதிரடி படையினர் கைப்பற்றியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

கடல் காற்று கப்பலில் தீப்பிழம்புகளைத் தூண்டுகிறது - கடற்படை

எம்ரீ நியூ டயமண்ட கப்பலில் ஏற்பட்டுள்ள தீ கடலில் ஏற்பட்டுள்ள வானிலை மாற்றம் காரணமாக  அதிகரித்துள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

ஐந்து மாவட்டங்களுக்கு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தினால் மண்சரிவு எச்சரிக்கை

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக ஐந்து மாவட்டங்களில் மண்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

 


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

815 கிலோ உலர்ந்த மஞ்சள் கடத்தல் முயற்சி கடற்படையினரால் முறியடிப்பு

கற்பிட்டி, எத்தளை பிரதேசத்தில் இன்று (06) 815 கிலோ கிராம் உலர்ந்த மஞ்சளினை சட்டவிரோதமாக கொண்டு செல்ல மேற்கொள்ளப்பட்ட முயற்சி கடற்படையினரால் முறியடிக்கப்பட்டது.




செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

தீப்பரவல் ஏற்பட்டுள்ள எண்ணெய் கப்பலின் கெப்டன் மற்றும் காயமடைந்தவர்களும் இலங்கை கடற்படையினரால் மீட்பு

சங்கமன்கந்தவிற்கு கிழக்காகவுள்ள கடற்பிராந்தியத்தில் எண்ணெய் கப்பல் ஒன்றில் ஏற்பட்ட தீப்பரவல் காரணமாக காயமடைந்த மூன்றவது பொறியியலாளரும் இலங்கை கடற்படையினரால் மீட்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக கரைக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக கடற்படை பேச்சாளர் கெப்டன் இந்திக டி சில்வா தெரிவித்துள்ளார்.   


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

தீப்பற்றிய எண்ணெய் தாங்கியை மீட்கும் நடவடிக்கையில் இலங்கை கடற்படை மற்றும் விமானப்படையினர்

சற்றுமுன்னர் சங்கமன்கந்த துறைமுகத்திலிருந்து 38 கடல் மைல்களுக்கு அப்பால் தீப்பற்றி கொண்ட வெளிநாட்டு எண்ணெய் தாங்கி ஒன்றை மீட்பதற்காக கடற்படையின் இரண்டு கப்பல்கள் மற்றும்  அதிவேக தாக்குதல் படகு என்பன ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக கடற்படை பேச்சாளர் கெப்டன் இந்திக டி சில்வா தெரிவித்துள்ளார்.  


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

கடும் மழை மற்றும் பலத்த காற்று தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

வளிமண்டலத்தில் நிலவுகின்ற தாழமுக்கம் காரணமாக  நாடு முழுவதும் மணித்தியாலத்துக்கு 60-70 கிலோமீட்டர் வரை அதிகரித்த வேகத்தில் காற்று  வீசக் கூடிய சாத்தியம் காணப்படுவதுடன், மழைவீழ்ச்சியும் சற்று அதிகரிக்கும் சாத்தியம் காணப்படுவதால் பொதுமக்கள் இது தொடர்பாக அவதானமாக செயற்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் வேண்டுகோள் விடுத்துள்ளது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

கடற்படையினரால் நிறுவப்பட்ட குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைச்சர் ராஜபக்ஷவினால் திறந்து வைப்பு

திஸ்ஸமஹாராம தெபரவெவ தேசிய பாடசாலையில் கடற்படையினரால் நிறுவப்பட்ட குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் நீர்ப்பாசன அமைச்சரும் உள்ளக பாதுகாப்பு, உள்நாட்டலுவல்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சருமான சமல் ராஜபக்ஷவினால் நேற்றைய தினம் (31) திறந்து வைக்கப்பட்டது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

முத்துராஜவெலவில் சட்டவிரோத மதுபான உற்பத்திச் சாலை படையினரால் சுற்றி வளைப்பு

முத்துராஜவெலவில் பிரதேசத்தில் விமானப்படை கடற்படை மற்றும் விசேட அதிரடிப்படை வீரர்களின் ஆல் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையின் போது சட்டவிரோதமாக மதுபானத்தை உற்பத்திச் சாலை சுற்றி வளைக்கப்பட்டது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

மஹியங்கனை பிரதேச வாசிகள் ஆயிரம் பேருக்கு கடற்படையினரால் சுத்தமான குடிநீர் வசதிகள் ஏற்பாடு

மஹியங்கனையில் உள்ள வவுகம்பஹா மற்றும் பெலிகல்ல பிரதேசத்தில் நீண்ட காலமாக நிலவிவந்த சுத்தமான குடிநீருக்கான தேவையினை நிவர்த்தி செய்யும் வகையில் கடற் படையினரால் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் ஒன்று நேற்றைய தினம் (29) ஸ்தாபிக்கப்பட்டது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

1428 கிலோ உலர்ந்த மஞ்சள் கடத்தல் முயற்சி கடற்படையினரால் முறியடிப்பு

கற்பிட்டி பிரதேசத்தில் நேற்று (29) உலர்ந்த மஞ்சளினை சட்டவிரோதமாக கொண்டு செல்ல முற்பட்ட வேளையில் ஆறு பேர் கைது செய்யப்பட்டனர். இதன்போது 1,428 கிலோ கிராம் மஞ்சள், ஒரு டிங்கி இழைப் படகு மற்றும் இரண்டு வாகனங்கள் என்பனவும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டன.




செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

துப்பாக்கிகளுடன் இருவர் பொலிஸாரால் கைது

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி மற்றும் 12 மிமீ சுடுகுழல் கொண்ட துப்பாக்கியுடன் யக்கலமுல்ல பிரதேசத்தைச் சேர்ந்த சந்தேக நபர்கள் இருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டனர்.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

ஹெரோயின் மற்றும் பணத்துடன் இருவர் பொலிஸாரால் கைது

6.7 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் மற்றும் 466,100 ரூபா பணம் வைத்திருந்த இரு பெண்கள் சந்தேகத்தின் பேரில் பொலிஸாரால் நேற்று (28) கைது செய்யப்பட்டனர்.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

கொரோனா வைரஸ் தொற்று குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,842 ஆக உயர்வு

டந்த 24 மணித்தியாலங்களில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியிருந்த மேலும் 12 பேர் பூரண குணமடைந்ததையடுத்து வைரஸ் தொற்றிலிருது குணமடைந்து வெளியேறியவர்களின் எண்ணிக்கை 2, 842ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.