Tamil
வீசா காலாவதியான நிலையில் நாட்டில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வெளிநாட்டவர்கள் 13 பேர் விஷேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டனர்.
துப்பாக்கி மற்றும் வெற்று துப்பாக்கி ரவைகளுடன் 42 வயது பெண்ணொருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைது நடவடிக்கை தங்கொட்டுவ, லிஹிரிய கம பிரதேசத்தில் இடம்பெற்றது.
கற்பிட்டி பிரதேசத்தில் லொறி ஒன்றில் கொண்டு செல்லப்பட்ட சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட 1,000 கிலோகிராம் மஞ்சள் பொதிகளை விசேட அதிரடிப்படையினர் கைப்பற்றியுள்ளனர்.
மேலும் ஐவர் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்து வீடுதிரும்பியதை அடுத்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 2, 816ஆக (25) உயர்வடைந்துள்ளது.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக வெளிநாடுகளில் பல மாதங்களாக சிக்கித்தவித்த 275 இலங்கையர்கள் இன்று (26) பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைய உள்ளனர்.
‘கிழக்கு மாகாணத்தில் காணப்படும் தொல்பொருள் பிரதேசங்களை முகாமைத்துவம் செய்தல் தொடர்பாக உருவாக்கப்பட்ட 12 பேர் கொண்ட ஜனாதிபதி செயலணிக்கு புதிதாக மேலும் நான்குபேர் நியமிக்கப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக விஷேட வர்த்தமானி அறிவித்தல் நேற்று (24) வெளியிடப்பட்டுள்ளது.
போதைபொருள் வியாபார நடவடிக்கை மூலம் பெறப்பட்ட நிதியை கையாண்டமை தொடர்பாக திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் பொடி லஸ்ஸி என அழைக்கப்படும் அருமஹந்தி ஜனித் மதுஷங்கவின் தாயார் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
தனிப்பட்ட, நிறுவன அன்பளிப்புகள் மற்றும் நேரடி வைப்புகளுடனான 'இடுகம' கொவிட் -19 சுகாதார மற்றும் சமூக பாதுகாப்பு நிதியத்தின் மீதி 1,567 மில்லியனையும் தாண்டியுள்ளது.
கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் தேடப்பட்டு வந்த பாதாள உலக குற்றவாளிகள் நான்கு பேரை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து இன்று (23) கைது செய்துள்ளனர்.
இன்று (23) கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான பெண் நோயாளி ஒருவர் மரணமடைந்ததை தொடர்ந்து இலங்கையில் கொரோனா மரண எண்ணிக்கை 12 ஆக உயர்வடைந்துள்ளது.
ஹம்பாந்தோட்டை பகுதியில் 30 பெர்ச்சஸ் காணிகளில் சட்டவிரோதமான முறையில் பயிரிடப்பட்ட கஞ்சா தோட்டத்தினை பொலிஸ் விஷேட அதிரடிப்படையினர் நேற்று (21) முற்றுகையிட்டுள்ளனர்.
கடந்த 24 மணித்தியாலங்களுக்குள் வைத்தியசாலைகளில் இருந்து 24 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் குணமடைந்து வெளியேறியதை அடுத்து, குணமடைந்து வீடு திரும்பியோரின் மொத்த எண்ணிக்கை 2789 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயாளர் பிரிவினால் இன்று (21) வெளியிடப்பட்ட அறிக்கையின் பிரகாரம் தெரிவிக்கப்படுகிறது.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக வெளிநாடுகளில் பல மாதங்களாக சிக்கித்தவித்த 169 இலங்கையர்கள் இன்று (21) காலை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தனர்.
கிளிநொச்சி பரந்தன் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது 49 கிலோகிராம் மற்றும் 700 கிராம் கஞ்சாவுடன் பெண் ஒருவரை பொலிஸார் நேற்று (20) கைதுசெய்துள்ளனர்.
சாக்குகளில் பொதிசெய்யப்பட்ட நிலையில் நாட்டுக்குள் சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட ஒரு தொகை உலர்ந்த மஞ்சளினை இலங்கை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர். இதற்கமைய மன்னார், வங்காலை மற்றும் நுரைச்சோலை, தலுவ கடற்கரை பிராந்தியங்களில் இடம்பெற்ற இருவேறு சம்பவங்களின் போது 14 சாக்கு பொதிகளில் பொதியிடப்பட்ட 807 கிலோகிராம் உலர்ந்த மஞ்சள் கைப்பற்றப்பட்டன.
மேல் மாகாணத்தின் தெமட்டகொடை, பாதுக்கை மற்றும் நிட்டம்புவ ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த நான்கு சந்தேக நபர்கள் ஹெரோயின் போதைப் பொருளினை தம் வசம் வைத்திருந்ததன் பேரில் பொலிஸாரினால் வெவ்வேறு சந்தர்ப்பங்களின் போது கைது செய்யப்பட்டுள்ளனர்.
கட்டாரிலிருந்து சுமார் 394 இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர். இவர்கள், கட்டார் எயார்வேஸ் விமான சேவைக்குச் சொந்தமான QR 668 விமானத்தின் மூலம் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வருகை தந்ததாக விமான நிலையத்தின் கடமை நேர முகாமையாளர் தெரிவித்தார்.
போலி நாணயத்தாள்கள் வைத்திருந்த கொழும்பு முல்லேரியா, கல்வான பிரதேசத்தை சேர்ந்த மூவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் நேற்று (17) மாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஜூன் மாதம் 10ஆம் திகதியிலிருந்து இன்று வரையான கடந்த இரண்டு மாதங்களுக்குள் சிறைச்சாலை அதிகாரிகள் 15 பேர் சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதுடன், 21 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் சிறைச்சாலைகள் ஆணையாளர் (நிர்வாகம் / புனர்வாழ்வு மற்றும் திறன் அபிவிருத்தி) சந்தன ஏக்கநாயக்க தெரிவித்தார்.
யுத்தத்தின் போது உயிரிழந்த , காயமடைந்த மற்றும் காணாமல் போன கடற்படை வீரர்களின் குடும்பங்கள் அத்துடன் ஓய்வு பெற்ற மற்றும் சேவையிலிருக்கும் கடற்படை வீரர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கும் மாதாந்தம் மருந்துகள் விநியோகிக்கும் புதிய முறை ஒன்றினை இலங்கை கடற்படை இன்று முதல் அறிமுகப்படுத்தியுள்ளது.