--> -->
2019 ஆம் ஆண்டில் அவுஸ்திரேலிய மற்றும் நியூசிலாந்திற்கு நோக்கி பயணிக்கும் இலங்கையை சேர்ந்த சட்டவிரோத குடியேற்றகாரர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில் இலங்கை கடற்படை, விமானப்படை மற்றும் அவுஸ்திரேலிய எல்லை பாதுகாப்பு படையுடன் இணைந்து கண்காணிப்பு நடவடிக்கைகளை பலப்படுத்தியுள்ளது.
நாட்டின் ஜனாதிபதியும் முப்படைகளின் தளபதியுமான கோட்டாபய ராஜபக்ஷவின் எண்ணக் கருவுக்கு அமைய நாட்டினதும் நாட்டு மக்களினதும் அதிகபட்ச பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதாக பதில் பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.
ஓய்வுபெற்ற படை வீரர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவது தொடர்பாக மேற்கொள்ளப்பட்டுவரும் நலன்புரி நடவடிக்கைகள் தொடர்பாக ஆராயும் மீளாய்வு கூட்டம் பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமால் குணரத்ன அவர்களின் தலைமையில் பாதுகாப்பு அமைச்சில் திங்களன்று (டிசம்பர் 30) இடம்பெற்றது.
பாதுகாப்பு அமைச்சின் சேவா வனிதா பிரிவு தனது பணியாளர்களின் சுமார் 500க்கும் மேற்பட்ட பிள்ளைகளுக்கு அப்பியாச புத்தகங்கள், புத்தகப்பைகள் மற்றும் காலணிகளுக்கான கிப்ட் வவுச்சர்கள் உள்ளடங்கிய கற்றல் உபகரண பொதிகளை வழங்கிவைத்தது.
22வது இராணுவ பரா விளையாட்டு போட்டிகள் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை (டிசம்பர், 27) சுகததாச உள்ளரங்கில் ஆரம்பமானது.
கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு அண்மையில் (டிசம்பர்,24 )இராணுவம் ஏற்பாடு செய்த நிகழ்வின்போது யாழ் பிராந்தியத்திலுள்ள வறிய மாணவர்களுக்கு சுமார் நூறு துவிச்சக்கர வண்டிகள் வழங்கி வைக்கப்பட்டது.
இலங்கையில் சுனாமி அனர்த்தம் ஏற்பட்டு இன்றுடன் (டிசம்பர், 26) 15 வருடம் பூர்த்தியடைகின்றது. இதனை முன்னிட்டு தேசிய பாதுகாப்பு தினம் இன்று நாடளாவிய ரீதியில் அனுஷ்டிக்கப்பட்டதுடன் நாட்டின் 25 மாவட்டங்களிலும் பல்வேறு ஞாபகார்த்த தின நிகழ்வுகளும் சமய அனுஷ்டானங்களும் மேற்கொள்ளப்பட்டன.
இலங்கைக்கு விஜயம் செய்த இந்திய கடற்படை தளபதி அட்மிரல் கரம்பிர் சிங், இலங்கை கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வாவுடன் இணைந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர், 22) திருகோணமலையிலுள்ள சாண்டி பே கடற்கரை பிரதேசத்தில் சுத்திகரிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.
முப்படைகளின் முனைஞரும் பாதுகாப்பு படைகளின் பிரதானியுமான மேன்மை தங்கிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் பரிந்துரைப்பின் கீழ் பாதுகாப்பு அமைச்சின் அனுமதியுடன் இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களினால் இராணுவத்திலுள்ள உயரதிகாரிகள் 63 பேர் இம் மாதம் (16) ஆம் திகதி பதவியுயர்த்தப்பட்டனர்.
இந்திய மற்றும் இலங்கை இராணுவத்தினரிக்கிடையிலான மித்திர சக்தி கூட்டுப் படைப் பயிற்சியின் இறுதிக் கட்ட நடவடிக்கைப் பயிற்சிகள் இந்தியா பூனோயில் சிவனேரி எனும் பிரதேசத்தில் கட்டமைப்பு மற்றும் நடவடிக்கை சவால்கள் போன்றவற்றின் தலைப்புகளில் இடம் பெறுகின்றன.
இரவு நேரங்களில் தெளிவாக அடையாளக் காணத்தக்க வகையில் துவிச்சக்கர வண்டிகளுக்கும் டெக்டர் வண்டிகளுக்கும் பளிச்சிடும் ஸ்டிக்கர்களை ஓட்டும் நிகழ்வு அண்மையில் இலங்கை பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்டது.
ஜப்பானிய கடற்படைக்கு சொந்தமான “DD - 102 ஹருசமே எனும் கப்பல் மூன்று நாள் நல்லெண்ண விஜயமொன்றினை மேற்கொண்டு இன்றைய தினம் (டிசம்பர், 10) இலங்கையை வந்தடைந்தது.
இலங்கை கடற்படை தனது 69வது ஆண்டு நிறைவை இன்று (டிசம்பர். 09) கொண்டாடுகிறது.
கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகம் இவ்வருடம் க.பொ.தா. சாதாரன தர பரீட்சைக்கு தோற்றவுள்ள கிழக்கு மாணவர்களுக்கு உதவியளிக்கும் வகையில் இலவச கல்வி கருத்தரங்குகளை கடந்த வாரம் நடாத்தியது. மூதூர் பேர்ள் கிரான்ட் வரவேற்பு மண்டபத்தில் கடந்த புதன்கிழமை (நவம்பர், 20) ஏற்பாடு செய்யப்பட்ட இவ் இலவச கல்வி கருத்தரங்கு, கிழக்கு பாதுகாப்பு படைவீரர்களது ஏற்பாட்டில் இடம்பெற்றதாக இராணுவ தகவல்கள் தெரிவிக்கின்றன.
பொலிஸ் போக்குவரத்து பிரிவின் சிரேஷ்ட அதிகாரிகளுடனான விஷேட சந்திப்பொன்று பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு) டப்டப்வீ ஆர்டப்பீ ஆர்எஸ்பி யுஎஸ்பி என்டிசி பிஎஸ்சி எம்பிள் அவர்கள் தலைமையில் இன்று (நவம்பர், 22) இடம்பெற்றது.
இலங்கை இராணுவத்தினரால் இவ்வருடம் (2019) க.பொ.தா. சாதாரன தர பரீட்சைக்கு தோற்றவுள்ள கிளிநொச்சி மாணவர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட இலவச உதவிக் கருத்தரங்கில் அதிகளவான மாணவர்கள் கலந்துகொண்டு நன்மையடைந்துள்ளனர்.
Tamil
அண்மையில் (ஒக்டோபர் 18) இலங்கை கடலோர பாதுகாப்பு படையினர் தெஹிவளை தமிழ் மகா வித்தியாலய மாணவர்களுக்கு நீர் பாதுகாப்பு தொடர்பான மற்றுமொரு விழிப்பூட்டல் நிகழ்வொன்றினை முன்னெடுத்துள்ளனர்.
ஐ. நா. பலபரிமான ஒருங்கிணைப்பு நிலைப்படுத்தல் திட்டத்திற்கு அமைய மாலி நாட்டில் அமைதிகாக்கும் பணிகளில் ஈடுபட்டிருந்த வேளையில் உயிரிழந்த இரண்டு இராணுவ வீரர்களின் குடும்பத்திற்கான இழப்பீட்டுத் தொகை நேற்றயதினம் கையளிக்கப்பட்டது.
பொலிஸ் போதைப்பொருள் பிரிவு அதன் வரலாற்றில் முதல் முறையாக இரண்டு புதிய ரோபோக்களை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் நிறுத்தியுள்ளது.
விமானப்படையினரால் நிர்மாணிக்கப்பட்ட புதிய வீடு ஒன்று, வறுமைக்கோட்டின் கீழ் வசிக்கும் குடும்பத்திற்கு அண்மையில் அன்பளிப்பாக வழங்கி வைக்கப்பட்டது.
இலங்கை விமானப்படையினர் வன பாதுகாப்பு திணைக்களம், மாஸ் ஹோல்டிங் நிறுவனம் மற்றும் பேராதனைப் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் அம்பாறை லஹுகள வனப்பகுதியில் வான் வழியாக விதை குண்டுகளை இடும் அதன் இரண்டாவது நிகழ்வினை வாரத்தின் முதற்பகுதியில் ஆரம்பித்துள்ளனர்.
இலங்கை இராணுவத்தின் பங்களிப்புடன் வடக்கு பிராதியத்தைச் சேர்ந்த அனகவீனமுர்ற பொதுமக்களுக்கு செயற்கை கால்களைப் பெற்றுக்கொடுக்கும் செயற்றிட்டம் அண்மையில் (ஒக்டோபர்,30 ) முன்னெடுக்கப்பட்டது.
இலங்கை இராணுவத்தின் கண்ணிவெடியகற்றும் பிரிவில் உள்ள 'சம்மி' எனும் மோப்பநாய் மற்றும் அதனைக் கையாளும் 5வது களமுனை பொறியியிலாளர் படைப்பிரிவின் லான்ஸ் கோப்ரல் பிஜி நிஷாந்த பண்டார ஆகியோர் வாஷிங்டனை தளமாகக்கொண்ட மார்ஷல் லெகஸி நிறுவனத்தினால் 2019ஆம் ஆண்டுக்கான சிறந்த அணியாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவ்வணியினருக்கு வாஷிங்டன் பயார்மௌன்ட் ஹோட்டலில் இடம்பெற்ற 'கிளியரிங் தி பாத்' எனும் நிகழ்வின்போது விருதுகள் வழங்கி வைக்கப்பட்டதாக இராணுவ தகவல்கள் தெரிவிக்கின்றன.
அண்மையில் இலங்கை கடலோர பாதுகாப்பு படையினரால் பாடசாலை மாணவர்களுக்கா நீரில் மூழ்குவதைத் தடுப்பது தொடர்பிலான விழிப்புணர்வு நிகழ்வு திட்டமொன்றினை முன்னெடுத்துள்ளனர்.