ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க நேற்று மாலை (ஜனவரி 13) சீனாவிற்கான நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நாட்டை விட்டு புறப்பட்டுச் சென்றார்.
ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க, பதவியேற்றதன் பின்னர் தனது முதலாவது உத்தியோகபூர்வ வெளிநாட்டு விஜயத்தை மேற்கொண்டு இன்று பிற்பகல் இந்தியாவிற்கு புறப்பட்டார்.
இலங்கை முன்னாள் படைவீரர் சங்கம் (SLESA) மற்றும் அதன் ஆயுதப்படை நினைவு தின பொப்பி குழுவினால் வருடாந்தம் ஏற்பாடு செய்யப்பட்டும் பொப்பி தின விழா ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க அவர்களின் தலைமையில், கௌரவ அதிதிகளின் பங்குபற்றுதலுடன், கொழும்பு விஹார மகாதேவி பூங்காவில் அமைந்துள்ள யுத்த வீரர் நினைவு தூபியில் நவம்பர் 24 அன்று நடைபெறவுள்ளது.
கடந்த காலத்தில் பாராளுமன்ற உறுப்பினர்ககள், மாகாண சபை உறுப்பினர்ககள், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், அரசியல் அமைப்புகள் மற்றும் அரச நிர்வாக சேவையில் உயர் பதவி வகித்த அதிகாரிகளுக்கு பல்வேறு காலகட்டங்களில் தற்பாதுகாப்பிற்காக இலங்கை பொலிஸ் மற்றும் இராணுவத்தினரால் வழங்கப்பட்ட கைத்துப்பாக்கிகள், ரிவோல்வர்கள் மற்றும் ரவை துப்பாக்கிகள் குறிப்பிடத்தக்களவு உள்ளதை பாதுகாப்பு அமைச்சினால் அவதானிக்கப்பட்டுள்ளது.
மியான்மரில் உள்ள இணைய மோசடி மையங்களுக்கு பல்வேறு வடிவங்களில் ஆட்சேர்ப்பது அதிகரித்து வருவது குறித்து தேசிய மனித கடத்தல் தடுப்பு பணிக்குழு (NAHTTF) பல சந்தர்ப்பங்களில் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
தற்பாதுகாப்பிற்காக பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட அனைத்து வகையான துப்பாக்கிகள் மற்றும் ரவைகளை 2024.11.07ஆம் திகதிக்கு முன்னர் இலங்கை கடற்படையின் வெலிசர முகாமில் உள்ள வணிக துப்பாக்கிகள் மற்றும் வெடிமருந்துகள் கொள்முதல் பிரிவுக்கு (CEFAP) கையளிக்குமாறு பாதுகாப்பு அமைச்சு 2024.10.06ஆம் திகதி ஊடாக அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது.
கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் (KDU) குழுவினரை ஏற்றிச் சென்ற பஸ் ஒன்று துன்ஹிந்த - பதுளை வீதியில் அம்பகாஸ் சந்தியில் (நவம்பர் 01) காலை 0745 மணியளவில் விபத்துக்குள்ளானது. இந்த பஸ்ஸில் பயணித்த 42 பேர் கொண்ட குழுவில் கொத்தலாவல பல்கலைக்கழக39வது ஆட்சேர்ப்பின் 36 மாணவர்கள், 3 விரிவுரையாளர்கள், குழுவிற்குப் பொறுப்பான பயிற்றுவிப்பாளர், பஸ்ஸிற்குப் பொறுப்பான மூத்த இராணுவ வீரர் மற்றும் பஸ் ஓட்டுநர் ஆகியோர் அடங்குவர்.
கொள்ளுப்பிட்டி பொலிஸ் எல்லைக்குட்பட்ட ஆர்.ஏ.டி மெல் மாவத்தை, மைக்கல் சுற்றுவட்டத்திலிருந்து பிரதமர் இல்லம் (அலரி மாளிகை) வழியாக ரொட்டுண்டா சுற்றுவட்டம் வரையான பகுதி பாதுகாப்பு காரணங்களுக்காக 2005ஆம் ஆண்டு முதல் மூடப்பட்டது.
தற்பாதுகாப்பிற்காக பொது மக்களுக்கு (சிவிலியன்களுக்கு) வழங்கப்பட்டுள்ள அனைத்து விதமான துப்பாக்கிகள் மற்றும் ரவைகளை பாதுகாப்பு அமைச்சினால் கையகப்படுத்துவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
முப்படை வீரர்களுக்கு வழங்கப்படும் ஊக்குவிப்பு கொடுப்பனவு தொடர்பாக தொளிவுபடுத்தல்
விஷேட பிரமுகர்களின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள முப்படை வீரர்களுக்காக வழங்கப்பட்டுவரும் விஷேட ஊக்குவிப்பு கொடுப்பனவு நிறுத்தப்பட்டுள்ளதாக சில ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
மியான்மரில் உள்ள சைபர் மோசடி மையங்களுடன் தொடர்புடைய குற்றச்செயல்களிள் அதிகரிப்பு குறித்து தேசிய மனித கடத்தல் தடுப்பு பணிக்குழு (NAHTTF) பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. மனித கடத்தல்காரர்கள் இளம் தகவல் தொழில்நுட்ப நிபுணர்களை குறிவைத்து வெளிநாடுகளில் வேலை வாய்ப்புகள் தருவதாக கோரி ஆட்களை கவர்வதில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.
Tamil
மியன்மாருக்கு சட்டவிரோதமான வழிகளில் வேலைக்குச் செல்வதைத் தவிர்க்குமாறு இலங்கையர்களிடம் பாதுகாப்புச் செயலாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார்
சட்டவிரோத வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர்கள் மற்றும் ஆட்கடத்தலில் ஈடுபடும் நபர்கள் மற்றும் நிறுவனங்கள் மூலம் மியன்மாருக்கு வேலைக்கு செல்வதைத் தவிர்க்குமாறு அனைத்து இலங்கையர்களுக்கும் இலங்கை அரசாங்கம் கடுமையாக அறிவுறுத்துகிறது.
தேசிய பாதுகாப்பு கற்கைகள் நிறுவனம் (INSS) “2024 இல் இலங்கையின் பொருளாதாரப் பாதுகாப்பு – கண்ணோட்டம் மற்றும் அபாய மதிப்பீடு செய்தல்” என்ற தலைப்பில் ஏற்பாடு செய்த வட்டமேசை கலந்துரையாடல் இடம்பெற்றது. பாதுகாப்பு அமைச்சின் நந்திமித்ர கேட்போர்கூடத்தில் கடந்த வியாழக்கிழமை (ஜூன் 06) இடம்பெற்ற இந்த கலந்துரையாடலில் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
KDU பல்கலைக்கழகத்தின் உள்ளகப் பதவியணியின் உறுப்பினர்களுக்கு மேலதிகமாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவையும் மற்றும் இலங்கை மருவத்துவ சங்கத்தையும் அவதானிப்பாளர்களாக பிரதிநிதிப்படுத்திய பிரதிநிதிகளை உள்ளடக்கிய ஒரு நேர்முகப் பரீட்சைக் குழு KDU இன் முகாமைத்துவ சபையால் அங்கீகரிக்கப்பட்டு நியமிக்கப்பட்டது.
ரஷ்ய - உக்ரேன் போருக்காக ஓய்வு பெற்ற இலங்கை பாதுகாப்பு படை வீரர்களை சட்டவிரோத வழிகளில் ஆட் கடத்தல் செய்தல் தொடர்பான தகவல்களைப் திரட்டுவதற்கு விசேட பிரிவு ஒன்றை நிறுவியுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
சட்டரீதியான விடுப்பு இன்றி கடமைக்கு சமூகமளிக்காத முப்படை உறுப்பினர்களுக்கு 20.04.2024 முதல் 20.05.2024 வரை சட்டரீதியாக சேவையில் இருந்து விலகுவதற்காக அறிவிக்கப்பட்ட பொது மன்னிப்பு காலம், கடமைக்கு சமூகமளிக்காத அதிகாரவானை முப்படை அதிகாரிகளுக்கு பொருந்தாது என பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
சட்டரீதியில் விலகமால் படையிலிருந்து சென்ற முப்படை வீரர்கள் சட்ட ரீதியில் சேவையிலிருந்து விலகிக் கொள்வதற்கான பொது மன்னிப்பு காலத்தை பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
நாட்டில் தற்போது நிலவி வரும் வறட்சியான காலநிலை மற்றும் காட்டுத் தீ அதிகரிப்பு குறித்து விளக்கமளிக்கும் வகையில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ பிரமித்த பண்டார தென்னகோன் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நேற்று (மார்ச் 13) நடத்தினார்.
சிவில் பாதுகாப்பு படையினர் தமது கடமைகளுக்கு புறம்பான வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார்களா என்பது தொடர்பில் அறிக்கை கோரப்பட்டுள்ளது