--> -->
Tamil
2021 மே, 24ம் திகதி இலங்கைக்கு அமெரிக்க வெளியுறவுத்துறையினால் பிறப்பிக்கப்பட்டிருந்த 4ம் நிலை பயண எச்சரிக்கை ஜூலை, 06ம் திகதி முதல் 3ம் நிலை பயண எச்சரிக்கையாக குறைக்கப்பட்டுள்ளது.
15வயது சிறுமியை பாலியல் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள கடற்படையின் சத்திர சிகிச்சை நிபுணர், பாதுகாப்பு அமைச்சின் பணிப்புரைக்கமைய கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவினால் சேவையிலிருந்து இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளார்.
திஸ்ஸமகாராம, திஸ்ஸவெவ வாவியில் மண் அகழ்வு பணிகளில் ஈடுபட்டுள்ள சீன தனியார் நிறுவன தொழிலாளர்கள், இராணுவத்தினர் பயன்படுத்தும் உருமறைப்பு சீருடையை ஒத்த ஆடையை அணிந்த சம்பவம் தொடர்பில் ஊடகங்களினால் மிகைப்படுத்தி காட்டப்பட்டுள்ளது.
2021 ஜூன் 10ஆந் திகதி ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் தீர்மானமொன்று நிறைவேற்றப்பட்டமைக்கு வெளிநாட்டு அமைச்சு வருத்தம் தெரிவிக்கின்றது. 'இலங்கையில் நிலைமை, குறிப்பாக பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்கள்' என்ற தலைப்பிலான இந்தத் தீர்மானமானது உண்மைக்கு மாறான கருத்துக்களைக் கொண்டிருப்பதுடன், நல்லிணக்கம் மற்றும் அபிவிருத்தியில் இலங்கை மேற்கொண்டுள்ள பன்முக முன்னேற்றம் குறித்து கவனம் செலுத்தவில்லை.
ஊடக அறிக்கை
'போர்க் கருவியாக இலங்கை சிறுவர்கள்' எனும் தலைப்பில், தேசிய பாதுகாப்பு கற்கைகள் நிறுவனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட கலந்துரையாடல் ஒன்று வெளிவிவகார அமைச்சில் அண்மையில் இடம்பெற்றது.
ஒய்வுதியம் தொடர்பில் அங்கவீனமுற்ற படைவீரர்களினால் நடாத்தப்பட்ட ஊடக மாநாடு தொடர்பாக பாதுகாப்பு அமைச்சினால் வெளியிடப்பட்ட ஊடக அறிக்கை :
மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்ற நிலைமையை கட்டுப்படுத்த சிறைச்சாலை அதிகாரிகளுடன் இணைந்து ஒன்றிணைந்த விஷேட நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரட்ன பொலிஸ் மா அதிபர் சி. டி விக்ரமரட்ணவுக்கு இன்று (01,டிசம்பர்) பணிப்புரை வழங்கியுள்ளார்.
மஹர சிறைச்சாலையில் நேற்று 2020 நவம்பர் 29ஆம் திகதி இடம்பெற்ற பதற்ற நிலைமை தொடர்பில் உரிய விசாரணைகளை நடத்துமாறு பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரட்ன பொலிஸ் மா அதிபர் சி. டி விக்ரமரட்ணவுக்கு பணிப்புரை வழங்கியுள்ளார்.