--> -->
மரியாதைக்குரிய மகா சங்கத்தினர், உட்பட அனைத்து மதத் தலைவர்கள், பெற்றோர்கள், நண்பர்கள், குழந்தைகள் மற்றும் அனைத்து இலங்கை பிரஜைகளே!
இந்திய இராணுவத்தைச் சேர்ந்த எவரும் நாட்டுக்குள் நுழைய வில்லை எனவும் இது தொடர்பில் சில இணையத்தளங்கள் மற்றும் சமூக ஊடகங்கள் ஊடாக பரப்பப்பட்டு வரும் தகவல்கள் உண்மைக்குப் புறம்பானது என்றும் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
இந்திய அரசாங்கத்துடன் அண்மையில் கைச்சாத்திடப்பட்ட கடல்சார் பாதுகாப்பு உடன்படிக்கைகள் தொடர்பில் சில அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்களால் தவறாகப் சித்தரிக்கப்பட்டுள்ளது போன்று இலங்கையின் தேசிய பாதுகாப்பிற்கு இடையூறையோ அல்லது அச்சுறுத்தலையோ ஏற்படுத்தாது.
Tamil
ஆட்கடத்தலை எதிர்த்துப் போராடுவதற்கு புலனாய்வு அதிகாரிகள் மற்றும் புலனாய்வு சேவைகளுடன் ஒருங்கிணைந்த உயர் ரக நிறுவன பொறிமுறையை நிறுவும் நோக்கில், அமைச்சரவையினால் இவ்வாண்டு ஜூலை மாதம் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைய ஆட்கடத்தலுக்கு எதிரான தேசிய செயலணியின் தலைமைத்துவனது, நீதி அமைச்சிலிருந்து பாதுகாப்பு அமைச்சிற்கு மாற்றப்பட்டது.
ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து பங்களாதேஷுக்கான கடல் பயணத்தின் போது திடீரென ஏற்பட்ட எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக அவசரநிலையை எதிர்கொண்ட பாரிய படகு ஒன்று சில நாட்களுக்கு முன்னர் மட்டக்களப்பு கடற்கரைக்கு அப்பால் உள்ள கடற்பகுதியில் நங்கூரமிட்டிருந்தது. இந்நிலையில் குறித்த படகு அகழ்வுப்பணிகளில் ஈடுபட்டுள்ளதாக சில சமூக ஊடகங்களில் வெளியிடப் பட்டுள்ள உண்மைக்குப் புறம்பான தகவல்களை பாதுகாப்பு அமைச்சு மறுத்துள்ளது.
பாதுகாப்பு அமைச்சின் கீழ் நிறுவப்பட்ட தேசிய பாதுகாப்பு தொடர்பான முதன்மையான சிந்தனைக் குழுவான தேசிய பாதுகாப்பு கற்கைகள் நிறுவனம் , அதன் இரண்டாவது தேசிய மாநாடான “கொழும்பு மாநாடு -2021” இம்மாதம் 24ம் திகதி காலை 8.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை பத்தரமுல்ல வாட்டர்ஸ் எட்ஜில் நடாத்தியது. இந்த மாநாடு “தேசிய பாதுகாப்பு மீதான சர்வதேச பரிமாணங்கள்” எனும் தொனிப்பொருளின் கீழ் இடம்பெற்றது.
இலங்கையில் தேவாலயங்கள் மீது பயங்கரவாத தாக்குதல் நடத்தப்படலாம் என சமூக ஊடகங்கள் மற்றும் இலத்திரனியல் ஊடகங்களில் பரவி வரும் செய்தி பகுப்பாய்வுக்குட்படுத்தப்பட்டதோ அல்லது உறுதிப்படுத்தப்பட்டதோ அல்ல.
கடற்படை, பொலிஸ் புலனாய்வு பிரிவுடன் ஒன்றினைந்து இலங்கையின் தெற்கே உள்ள சர்வதேச கடற்பரப்பில், 1,575 மில்லியன் ரூபா பெறுமதியான சுமார் 170 கிலோகிராமிற்கும் மேற்பட்ட ஹெராேயின் போதைப்பொருளை எடுத்துச் சென்ற வெளிநாட்டு மீன்பிடி படகினை கைப்பற்றி (செப்டம்பர், 18) கொழும்பு துறைமுகத்திற்கு கொண்டு வந்துள்ளனர்.
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான அதிகாரிகளுக்கு அச்சுறுத்தல் பாணியில் கிடைக்கப்பெற்றதாக கூறப்படும் போலி மின்னஞ்சல் தொடர்பில் பொது மக்கள் வீணாக அச்சமடைய தேவையில்லை என்று பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு) தெரிவித்தார்.