ஏப்ரல் மூன்றாம் திகதி வரை வீட்டிலிருந்து பணிபுரியும் காலம் நீடிப்பு

மார்ச் 27, 2020

நாட்டில் பரவிவரும் கொவிட் – 19 வைரஸை கட்டுப்படுத்தும் வகையில் அரசினால் முன்னெடுக்கப்படும் செயற்பாடுகளுக்கு ஒத்துழைக்கும் வகையில் இம்மாதம் (மார்ச்) 30 ஆம் திகதியிலிருந்து ஏப்ரல் மாதம்  மூன்றாம் திகதி வரை வீட்டிலிருந்து பணிபுரியும் காலம் நீடிக்கப்பட்டுள்ளது.

அத்தியாவசிய சேவைகளைத் தவிர அனைத்து அரச, செமி அரச, மற்றும் தனியார் துறை நிறுவனங்களுக்கும் இது பொருந்தும்.