வெளிநாடுகளில் தாய்நாடு திரும்பிய 501 பேர் தனிமைப்படுத்தப்பட்ட பின்னர் வீடு திரும்பியுள்ளனர்.

மார்ச் 27, 2020

இத்தாலி மற்றும் தென் கொரியாவிலிருந்து வருகைதந்த மற்றுமொரு குழுவினர்  புனானி, கண்டக்காடு மற்றும் தியதலாவை தனிமைப்படுத்தப்படும் நிலையங்களில் 14 நாட்கள்  தங்க வைக்கப்பட்ட 501 பேர் மற்றும் நான்கு வெளிநாட்டவரும்  தனிமைப்படுத்தப்பட்டு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்ட பின்னர் இன்று (27) காலை தமது வீடுகளுக்கு சென்றுள்ளனர்.

காலி, கொழும்பு, கண்டி, கடவத்தை, குருணாகல் மற்றும் மாத்தரை ஆகிய பகுதிகளை சேர்ந்த அவர்களை அந்தந்த பகுதிகளுக்கு இராணுவத்தின் உதவியுடன் அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.