வறுமைக்கோட்டின் கீழ் வசிக்கும் பொது மக்களுக்கு கடற்படையினரால் குடிநீர் மற்றும் உலர் உணவுப்பொருட்கள் விநியோகிப்பு

மார்ச் 27, 2020

கடற்படையினரால் முன்னெடுக்கப்பட்டுவரும் சமூக நலன்புரி நடவடிக்கைகளில் ஒன்றாக வறுமைக்கோட்டின் கீழ் வசிக்கும் ஏழைக் குடும்பங்கள் மற்றும்  மதஸ்தலங்கள் ஆகியவற்றுக்கு  குடிநீர் மற்றும் உலர் உணவுப்பொருட்கள் என்பன விநியோகித்து வைக்கப்பட்டன. குறித்த இந்த நடவைக்கை  வடமத்திய கடற்படை கட்டளையகத்தினால் இம்மாதம் 26ம் திகதி  முதல் 27ம் திகதி  வரை முன்னெடுக்கப்பட்டது.
 
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட ஏழை மக்களுக்கு உதவியளிக்கும் வகையில்  கடற்படைத்தளபதி  வைஸ் அட்மிரல் பியால் டி சில்வாவின்  பணிப்புரைக்கமைய குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.  

வட மத்திய கடற்படை பிராந்திய கட்டளை தளபதி ரியர் அட்மிரல் லலித் திசானாயகவின் மேற்பார்வையின் கீழ், கடற்படையினரின்  நடமாடும்  குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து சுத்தமான மற்றும் பாதுகாப்பான குடிநீர் பொது மக்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது.