அத்தியாவசிய உணவுப் பொருட்களை வீடு வீடாக விநியோகிக்கும் சேவைகள் ஜனாதிபதி செயலணியினால் முன்னெடுப்பு

மார்ச் 27, 2020

பொதுமக்கள் வீடுகளிலே தங்கியிருக்கும் அதேவேளையில் தமக்கு தேவையான அத்தியாவசியப் உணவுப்பொருட்களை கொள்வனவு செய்யும் வகையில் வீட்டுக்கு வீடு சென்று அப்பொருட்களை வழங்குவதற்கு தேவையான அனைத்து முன்னெடுப்புக்களையும் ஜனாதிபதியின் செயலணி முன்னெடுத்துள்ளது.

ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் போது பொருட்களை கொண்டு செல்ல அனுமதிக்கப்பட்ட வாகனங்களை தவிர எந்த ஒரு பொது நபரும் வீதிகளில் நடமாட அனுமதிக்கப்படமாட்டது என தெரிவிக்கப்பட்டு வெளியிடப்பட்ட அறிக்கையில் அரசாங்கம் இதனை தெரிவித்துள்ளது.