"சத்விரு அபிமன்" நிகழ்வில் ஜனாதிபதி பங்கேற்பு
ஜூலை 22, 2019தாய் நாட்டில் சமாதானத்தையும் ஐக்கியத்தையும் ஏற்படுத்துவதற்காக தமது உயிர்களையும் அவயவங்களையும் தியாகம் செய்த முப்படை, பொலிஸ் மற்றும் சிவில் பாதுகாப்பு படைகளுக்கான பாரிய நலன்புரி திட்டமான 'சத்விரு அபிமன்' நிகழ்வு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் இன்று (ஜூலை, 22) இடம்பெற உள்ளது.
இத்தேசிய நிகழ்வில் தாய் நாட்டிற்காக தமது உயிர்களை தியாகம் செய்த போர் வீரர்களின் குடும்பங்கள், யுத்தத்தின் போது அங்கவீனமுற்ற வீரர்கள், சேவையிலுள்ள மற்றும் ஓய்வுபெற்ற முப்படை வீரர்கள், பொலிஸ் மற்றும் சிவில் பாதுகாப்பு படைகள் ஆகியன இப்பாரிய நலன்புரி திட்டத்தின் மூலம் நன்மைகள் பெறவுள்ளனர். குறித்த நிகழ்வு இன்று மாலை 4.00 மணியளவில் சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் ஆரம்பமாகவுள்ளது.
இன்று இடம்பெறவுள்ள இத்தேசிய வைபவத்தின்போது, பெரும் எண்ணிக்கையிலான பயனாளிகளுக்கு புதிய வீடுகள், பகுதியளவில் நிர்மாணிக்கப்பட்ட வீடுகளுக்கான உதவித்தொகைகள், காணி மற்றும் கல்வி உதவித்தொகை ஆகியன வழங்கி வைக்கப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.