வறுமை ஒழிப்பிற்கான ஜனாதிபதி செயலணியின் இணைத் தலைவராக மேஜர் ஜெனரல் (ஒய்வு) சுமேத பெரேரா நியமிப்பு.

மார்ச் 28, 2020

ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவினால் வறுமை ஒழிப்பு மற்றும் வாழ்வாதார அபிவிருத்திக்கான ஜனாதிபதி செயலணியின் இணைத் தலைவராக மேஜர் ஜெனரல் (ஒய்வு) சுமேத பெரேரா நியமிக்கப்பட்டுள்ளார். அத்துடன்,  அவர்  இச் செயலணியின் கீழ் விவசாயத்துறை நடவடிக்கைகளுக்கும் தலைமை வகிப்பார் எனபது குறிப்பிடத்தக்கது.

இலங்கை இராணுவத்தின் எயார் மொபைல் படையணியின் முன்னோடிகளில் ஒருவராக திகழ்ந்த அவர், இராணுவ ஊடக பணிப்பாளராகவும், பாதுகாப்பு அமைச்சின் இராணுவ ஊடகப் பேச்சாளராகவும், பல காலாட்படை பிரிவுகளுக்கு கட்டளைத்தளபதியாகவும் செயட்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.