விமானப்படையினால் கொழும்பு தொற்று நோய் வைத்தியசாலைக்கு புதிய தனிமைப்படுத்தும் பிரிவு கையளிப்பு

மார்ச் 28, 2020

கொழும்பு தொற்று நோய் வைத்தியசாலைக்கு புதிதாக நிர்மாணிக்கப்பட்ட தனிமைப்படுத்தும் பிரிவை இலங்கை விமானப்படை இன்று (28) கையளித்துள்ளது.

வைத்தியசாலை வளாகத்தினுள் பத்து நாட்களில் நிர்மாணித்த  குறித்த தனிமைப்படுத்தும் பிரிவானது 16 அறைகளை கொண்டுள்ளது.
   
இதன்மூலம் குறித்த வைத்தியசாலையில் மேலும் கொவிட் -19 வைரஸால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்க முடியும்.