இலங்கையின் முதல் கொரோனா வைரஸ் மரணம் பதிவானது

மார்ச் 28, 2020

அங்கோடை தொற்று நோயியல் வைத்தியசாலையில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டிருந்த நபர் ஒருவர் சற்று நேரத்துக்கு முன் உயிரிழந்தார்.

மாரவில பகுதியில் வசிப்பிடமாக கொண்ட குறித்த நோயாளி, ஏற்கனவே சர்க்கரை நோயினால் பாதிக்கப்பட்ட ஒருவர் என்றும் சிறுநீரக மாற்று சிகிச்சைக்கு உட்பட்டவர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.