கடற்படையினால் கொவிட் -19 சந்தேகத்திற்கு இடமான மீனவர் கரைக்கு கொண்டுவரப்பட்டனர்

மார்ச் 30, 2020

கொவிட் -19 வைரஸ் பாதிப்புக்குள்ளான நபருடன் தொடர்பைப் பேணிய நபர் ஒருவர்  நேற்று (29) கடலுக்கு மீன் பிடிக்க சென்ற வேளையில் இலங்கை கடற்படையினர் அம்மீனவரை கரைக்கு அழைத்துவந்துள்ளனர். திருகோணமலை பொலிஸாரினால் வழங்கப்பட்ட தகவலுக்கமையவே குறித்த மீனவர் அழைத்துவரப்பட்டுள்ளார்.

குறித்த நபர் இருந்த படகினை அடைந்த கடற்படையினர் ஏனைய இரு படகுகளின்  உதவியுடன் அதிலிருந்த பத்து நபார்களுடன் திருகோணமலை துறைமுகத்தை வந்தடைதனர்.

இங்கு அழைத்துவரப்பட்ட மூன்று படகுகளும் இலங்கை கடற்படையின்  இரசாயன, உயிரியல், கதிரியக்க மற்றும் அணு (சிபிஆர்என்) பிரிவினால் கிருமி தொற்றுநீக்கம் செய்யப்பட்டது.

அத்துடன், இவ்வாறு அழைத்து வரப்பட்டவர்கள் மேலதிக விசாரணை நடவடிக்கைகளுக்காக திருகோணமலை துறைமுக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.