--> -->

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட போலிஸ்டிக் ரப்பர் மாதிரி இராணுவத்தினால் அறிமுகம்

ஜனவரி 14, 2019

ஆய்வு மற்றும் அபிவிருத்திக்குமான மையத்தின் (CRD) தொடர்ச்சியான விஞ்ஞான ஆய்வுகளின் பலனாக புதிதாக உருவாக்கப்பட்டு உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட போலிஸ்டிக் இரப்பர் துப்பாக்கிச் சூடுக்கான மாதிரியை இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக அவர்களிடம் கையளிக்கப்பட்டது. இந்நிகழ்வு, இராணுவ தலைமையகத்தில் அண்மையில் (ஜனவரி, 09) இடம்பெற்றது.

குறித்த புதிய உற்பத்தி மாதிரி, ஆய்வு மற்றும் அபிவிருத்திக்குமான மையத்தில் இணைப்புச் செய்யப்பட இலங்கை கவசவாகனப் படைப்பிரிவின் மேஜர் என்.ஏ.பீ.எம்.எஸ் நிஷ்சங்க அவர்களினால் வழங்கப்பட்டதாக இராணுவத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவ்வுற்பத்தியானது, தொடர்ச்சியாக ஆறு மாதங்களுக்கு மேலாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் பலனாக கிடைக்கப்பெற்றுள்ளது. மேலும் அதன் தரம் மற்றும் ஆயுட்கால மேம்பாட்டுக்காக ஐந்து மாதங்கள் தொடர்ச்சியாக பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதன் முதல் பயிற்சியானது வவுனியாவில் அமைந்துள்ள 3 ஆவது இராணுவ விஷேட படையணி தலைமையகத்தில் நடத்துவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதனை தொடர்ந்து இலங்கை விமானப்படை, கடற்படை ஆகியவற்றிலும் நடாத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. உள் நாட்டில் தயாரிக்கப்பட்ட இப்புதிய உற்பத்தியினை பயன்படுத்துவதன் மூலம் குறிப்பிடத்தக்க அளவு நிதியினை சேமிக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.