ஸ்ரீ ஜெயவர்தனபுர கோட்டே ஒபே சேகரபுறவிலுள்ள அருநோதைய மாவத்தை முற்றாக முடக்கம்

மார்ச் 30, 2020

ஸ்ரீ ஜெயவர்தனபுர கோட்டே  ஒபே சேகரபுறவிலுள்ள அருநோதைய மாவத்தை முற்றாக முடக்கப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் இரண்டு சிறுவர்கள் உட்பட அறுவர் கொரோனா வைரஸ் அறிகுறிகள் காணப்பட்டதையடுத்து இவ்வாறு முடக்கப்பட்டுள்ளது.

“டிவைன் சேவிஸ்” எனும் தெய்வீக போதனைக்காக சூரியவெவயில் ஏற்பாடுசெய்திருந்த  மத நிகழ்வில் கலந்துகொள்ளும் வகையில் போதகர் ஒருவருடன் தாம் புனித யாத்திரை மேற்கொண்டதாகவும், இங்கு நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொள்ள மேலும் இரண்டு பஸ் வண்டிகளில் பலர் வருகைதந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த சம்பவத்திற்குப் பின்னர் தலைமறைவான போதகரை பொலிஸார் கண்டுபிடித்து விசாரித்துள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பொலிஸ் தகவல்களின் பிரகாரம் குறித்த பகுதியில் எட்டு குடும்பத்தினர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.