அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டுமே ஊரடங்கு சட்டத்தின் போது அனுமதி வழங்கப்படும் - பொலிஸ்
மார்ச் 31, 2020அத்தியாவசிய சேவைகளின் கீழ் ஊடகங்களுக்கு அனுமதி பெறமுடியும்.
அத்தியாவசிய சேவைகள் மற்றும் பிரதேச
வைத்திய அதிகாரி, பொது சுகாதார பரிசோதகர் ஆகியோரினால் பரிந்துரைக்கப்பட்ட ஆபத்தான நிலையில் உள்ள நோயாளிகள் ஆகியோரைத் தவிர ஏனையோருக்கு எவ்விதத்திலும் ஊரடங்கு சட்ட வேளையில் பயணம் செய்ய அனுமதி வழங்கப்படமாட்டாது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சுகாதார மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளின் எச்சரிக்கைகளுக்கமைவாக, மக்கள் நடமாட்டத்தை தடுப்பதற்காக பொலிஸாரினால் ஊரடங்குச் சட்டம் கடுமையாக அமுல்படுத்துகின்றது.
சுகாதார சேவைகள் மற்றும் ஊடகங்கள் அத்தியாவசிய சேவைகளாக அடையாளம் காணப்பட்டுள்ளதால், அவர்களுக்கும், அவசியமான ஏனைய சேவைகளுக்கும் ஊரடங்கு வேளையில் விசேட அனுமதி பத்திரம் வழங்கப்பட்டுள்ளதாக பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.
இதேவேளை, அந்தந்த சேவைகளின் உத்தியோகபூர்வ அடையாள அட்டைகளும் ஊரடங்கு வேளையில் அனுமதி பத்திரமாக ஏற்றுக்கொள்ளப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.