உயிர்த்த ஞாயிறு தாகுதலில் உயிரிழந்தவர்களின் ஆத்ம சாந்தி வேண்டி பாதுகாப்பு அமைச்சில் விஷேட சமய ஆராதனைகள்
ஜூலை 21, 2019உயிர்த்த ஞாயிறு தாகுதலில் உயிரிழந்தவர்களின் ஆத்ம சாந்தி வேண்டிவிஷேட சமய ஆராதனைகளும் தானம் வழங்கும் நிகழ்வும் பாதுகாப்பு அமைச்சில் இன்று (ஜுலை, 21) ஏற்பாடு செய்யப்பட்டன. துரதிஷ்டவசமான இக் குண்டுத்தாக்குதலுக்கு இலக்கான பொதுமக்கள் உயிரிழந்து மூன்று மாதங்கள் நிறைவடைந்துள்ள நிலையில் அவர்களின் ஆத்ம சாந்தியடைய பௌத்த, இந்து, இஸ்லாமிய மற்றும் கத்தோலிக்க சமய தலைவர்களினால் சமய ஆராதனைகள் நடாத்தப்பட்டது.
பாதுகாப்பு அமைச்சின் சேவா வனிதா பிரிவினால் பாதுகாப்பு அமைச்சின் கேட்போர்கூடத்தில் இன்று காலை ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் எஸ்எச்எஸ்.கோட்டேகொட (ஓய்வு) டப்டப்வீ ஆர்டப்பீ ஆர்எஸ்பி வீஎஸ்வீ யுஎஸ்பி என்டிசி அவர்கள் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.
பாதுகாப்பு செயலாளரினால் புனித சின்னம் பிரதிஷ்டை செய்யப்பட்ட பின்னர் வைபவத்தின் அனைத்து நிகழ்வுகளும் ஆரம்பமாகின. சமய ஆரதானைகள் யாவும் அமரபுர பீட மகா நாயக்க தேரரான வண. கொடுகொட தம்மவாச தேரோ அவர்களின் தலைமயில் இடம்பெற்றது. இந்து, இஸ்லாமிய மற்றும் கத்தோலிக்க சமய ஆராதனைகள் அந்தந்த சமய தலைவர்களினால் நடாத்தப்பட்டது.
உயிர் இழந்த அனைவரின் ஆத்மா சாந்தியடையவும் மற்றும் குண்டு குண்டுவெடிப்பில் காயமடைந்தவர்களை விரைவாக குணமடையவும் வேண்டி சர்வ மத பிரார்த்தனைகள் நடத்தப்பட்டன.
சமய ஆராதனைகள் நிறைவடைந்ததும் மகா சங்க உறுப்பினர்கள் மற்றும் ஏனைய சமய தலைவர்களுக்கு காணிக்கைகளும் தானமும் வழங்கப்பட்டது.
இந் நிகழ்வில் பாதுகாப்பு அமைச்சின் சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி சோனியா கோட்டேகொட, முப்படை தளபதிகள், பாதுகாப்பு அமைச்சின் சிரேஸ்ட அதிகாரிகள், சிரேஸ்ட முப்படை அதிகாரிகள், பொலிஸ் மற்றும் சிவில் பாதுகாப்பு படை அதிகாரிகள்,பாதுகாப்பு அமைச்சின் இராணுவ இணைப்பு அதிகாரி மற்றும் அமைச்சின் உத்தியோகத்தவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
2019 ஏப்ரல் மாதம் 21ம் திகதி இடம்பெற்ற தொடர் தற்கொலை குண்டு குண்டுவெடிப்பு சம்பவம் தேசத்தை உலுக்கியது, ஏராளமான மக்களின் உயிரைக் கொன்றது மற்றும் நூற்றுக்கணக்கானவர்கள் காயமடைந்தனர். கொச்சிக்கடையில் உள்ள புனித அந்தோணியார்தேவாலயம் மற்றும் கொழும்பில் உள்ள சுற்றுலா விடுதிகள் உட்பட பல தேவாலயங்களை குறிவைத்து இந்த வெடிகுண்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டன. குண்டுவெடிப்பில் ஏராளமான வெளிநாட்டு பிரஜைகளும் உயிர் இழந்தமை குறிப்பிடத்தக்கது.