கடற்படையினரால் நான்கு தனிமைப்படுத்தல் மையங்கள்அமைப்பு

ஏப்ரல் 01, 2020

நாட்டில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் வசதிகளை மேம்படுத்துவதற்காக, மிஹிந்தலை, ஓயாமடுவ, முலாங்கவில் மற்றும் ஒலுவில் துறைமுக வளாகம் ஆகிய பிரதேசங்களில் இலங்கை கடற்படையினரால் நான்கு தனிமைப்படுத்தல் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த நான்கு தனிமைப்படுத்தல் மையங்களிலும் சுமார் 268 நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க முடியும். கடற்படை பொது சுகாதார பரிசோதகர்களின் நேரடி மேற்பார்வையின் கீழ் சுகாதார வசதிகள், இணையம், தொலைக்காட்சி, உணவு பரிபாலனம் ஆகியன கடற்படையினரால் முன்னெடுக்கப்படவுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களுக்கு சிகிச்சை வழங்க இடமளிக்கும் வகையில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வாவின் பணிப்புரைக்கமைய குறித்த திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. தேசிய சுகாதார அமைப்பின் திறனையும் தேவைப்பாடுகளையும் மேம்படுத்தும் அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு இந்த திட்டத்தின் மூலம் ஒத்துழைப்பு வழங்கப்பட உள்ளது.