இராணுவ விளையாட்டு சாதனையாளர்களை கௌரவிக்கும் ‘வர்ண இரவு’ நிகழ்ச்சி
ஜூலை 21, 2019இலங்கை இராணுவத்தில் 2017/ 2018 ஆம் ஆண்டிற்கான விளையாட்டு துறையில் சாதனைகளை நிலைநாட்டிய சாதனையாளர்களை கௌரவிக்கும் முகமாக ஒழுங்கு செய்யப்பட்ட ‘வர்ண இரவு’ நிகழ்ச்சி இம் மாதம் (19) ஆம் திகதி மாலை கொழும்பு தாமரை தடாகத்தில் இடம்பெற்றது.
இந்த நிகழ்வானது அதிதிகளான தொலைத்தொடர்பு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் விளையாட்டு அமைச்சர், பாதுகாப்பு செயலாளர், பாதுகாப்பு பதவிநிலை பிரதானி, முப்படைத் தளபதிகளின் பங்களிப்புடன் இடம்பெற்றது.
2017, 2018 ஆம் ஆண்டுகளில் இடம்பெற்ற படையணி, பாதுகாப்பு சேவை, தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளில் 41 விளையாட்டு துறைகளில் பங்குபற்றி சாதனைகளை நிலைநாட்டிய 125 இராணுவ விளையாட்டு வீரர்களுக்கு தங்கம், வெள்ளி மற்றும் வெண்கல பதக்கங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
மங்கள விளக்குகள் ஏற்றப்பட்டு நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த படை வீரர்களை நினைவு படுத்தி இரண்டு நிமிட மௌன அஞ்சலிகள் செலுத்தி இராணுவ கீதத்துடனும் காலாச்சார நடனத்துடன் நிகழ்வுகள் ஆரம்பமானது.
இந்த நிகழ்வில் நன்றியுரை பதவிநிலை பிரதானி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களினால் ஆற்றப்பட்டு அதன் பின் இராணுவ விளையாட்டு சாதனையாளர்களின் விளையாட்டு வீடியோ கண்காட்சிகள் மேடையில் திறையிட்டு பார்வையாளர்களுக்கு முன் வைக்கப்பட்டன. பரா ஒலிம்பிக் விளையாட்டு போட்டி 2017 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளில் சிறந்த விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கனைக்கு 500,000/= ரூபாய் மதிப்புமிக்கு காசோலை தொலைத்தொடர்பு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் விளையாட்டு அமைச்சின் அமைச்சர் மதிப்புக்குரிய ஹரீன் பெர்ணாண்டோ, அவர்களினால் வழங்கி வைக்கப்பட்டன.
பாதுகாப்பு செயலாளரினால் 200,000/= ரூபாய் பெறுமதிமிக்க காசோலை 2017 ஆம் ஆண்டிற்கான விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகளான கொமாண்டோ படையணியைச் சேர்ந்த சாஜன் J.A.C லக்மால், இராணுவ மகளிர் படையணியைச் சேர்ந்த லான்ஸ் கோப்ரல் M.W.T சமன்மலி, கஜபா படையணியைச் சேர்ந்த சாஜன் H.M.D.P ஹேரத் அவர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டன.
இதேபோல், இலங்கை பொறியியல் படையணியைச் சேர்ந்த சார்ஜன் M.V.I.R.S பண்டாரா, 2018 ஆம் ஆண்டில் சிறந்த விளையாட்டு வீரராகவும், இலங்கை இராணுவ மகளிர் படையணியைச் சேர்ந்த லான்ஸ் கோப்ரல் K.M.P.K லியனகே, சிறந்த விளையாட்டு வீரங்கனையாக தேர்ந்தெடுக்கப்பட்டு விருதுகள் வழங்கி வைக்கப்பட்டன.
இந்த விழாவில் வில் ஏய்தல், தடகள, பூப்பந்து, பேஸ்போல், கூடைப்பந்து, பில்லியர்ட் & ஸ்னூக்கர், கரம், குத்துச்சண்டை, கிரிக்கெட், சைக்கிள் ஓட்டம், எல்லே, ஜிம்னாஸ்டிக்ஸ், நெட்பால், பாரா விளையாட்டு, ஹேண்ட்பால், ஹொக்கி, ஜூடோ, கபடி, கராத்தே, மோட்டார் ஆகியவற்றில் சிறந்து விளங்கியவர்களுக்கு வண்ணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
மேலும் பாரம் தூக்குதல், பவர்-லிஃப்டிங் மற்றும் உடல் கட்டமைப்பு, ரோயிங், ஷூட்டிங், சாக்கர், ஸ்குவாஷ், நீச்சல் மற்றும் வாட்டர் போலோ, பாராசூட்டிங், ரக்பி கால்பந்து, டென்னிஸ், டேபிள் டென்னிஸ், டைகுண்டோ, மல்யுத்தம், வுஷு மற்றும் கைப்பந்து போன்ற விளையாட்டு துறைகளில் சாதனைகளை நிலைநாட்டிய படையினருக்கு வண்ணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
இந்த நிகழ்வில் ஓய்வு பெற்ற முன்னாள் இராணுவ தளபதி ஜெனரல் C.S வீரசூரிய, இராணுவ தொண்டர் படைத் தளபதி மேஜர் ஜெனரல் சத்யபிரிய லியனகே, மற்றும் இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள் இணைந்திருந்தனர்.
நிகழ்வில் நன்றியுரை இராணுவ விளையாட்டு துறையின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் அநுர சுத்தசிங்க அவர்களினால் ஆற்றப்பட்டன.
இந்த நிகழ்வினை பார்வையிடுவதற்கு இராணுவ மூத்த அதிகாரிகள், ஓய்வு பெற்ற உயரதிகாரிகள் மற்றும் இராணுவ குடும்ப அங்கத்தவர்கள் வருகை தந்தனர் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.