கடற்படையினரின் தனிமைப்படுத்தல் மையங்களில் தங்கியிருந்த முதற் தொகுதியினர் வீடு திரும்பினர்
ஏப்ரல் 03, 2020இலங்கை கடற்படையின் தனிமைப்படுத்தல் மையங்களில் 14 நாட்கள் தனிமைப்படுத்தல் செயல்முறையை நிறைவு செய்த சில வெளிநாட்டு பிரஜைகளும் இலங்கையர்களும் தங்கள் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் அரசாங்கத்தின் ஒருங்கிணைந்த வழிமுறைக்கு உதவும் வகையில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வாவின் பணிப்புரைக்கு அமைவாக பூச கடற்படைத் தளத்தின் 4 மாடி கட்டிடம் தனிமைப்படுத்தும் மையமாக மாற்றப்பட்டது.
இந்த குழுவில், ஒரு ஜப்பனியரும் இரண்டு பிரெஞ்சு நாட்டினரும் அடங்கியிருந்தனர். அவர்கள் தனிமைப்படுத்தல் செயல்முறைக்கு உட்படுத்தப்பட்டார்கள் என்பதை உறுதிப்படுத்த அவர்களுக்கான சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.
இந்த சான்றிதழ்கள், தெற்கு கடற்படை பிராந்திய கட்டளை தளபதி ரியர் அட்மிரல் கஸப்பா போலினால் வழங்கி வைக்கப்பட்டன.
இதேவேளை மேலும் 64 இலங்கையர்கள் தற்போது கடற்படை தளத்தில் தனிமைபடுத்தல் செயல்பாட்டிற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக கடற்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.