போலியான செய்திகள் மற்றும் தகவல்கள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு ஜனாதிபதி தெரிவிப்பு

ஏப்ரல் 04, 2020

நாடு எதிர்நோக்கியுள்ள நெருக்கடியான சூழலில் வாட்ஸ்அப், வைபர், மெசேஞ்சர் போன்ற
சமூக வலைத்தளங்களினூடாக பல போலியான செய்திகள் பரப்பப்பட்டு வருவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ விடுத்துள்ள ட்விட்டர் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் அனைத்து செய்திகளும் அறிவிப்புகளும் உத்தியோகபூர்வ தளங்களின் ஊடாக மட்டுமே வெளியிடப்படும் என குறித்த ட்விட்டர் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.