பங்களாதேஷ் தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் பாதுகாப்பு செயலாளரருடன் சந்திப்பு

ஜனவரி 15, 2019

இலங்கைக்கான பங்களாதேஷ் தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கொமடோர் செய்யத் மக்சுமுல் ஹாகிம் அவர்கள் பாதுகாப்பு செயலாளர் திரு. ஹேமசிறி பெர்னாண்டோ அவர்களை திங்கள் கிழமையன்று (ஜனவரி,14) சந்தித்தார்.

பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்ற இச்சந்திப்பில் பாதுகாப்பு ஆலோசகர் மற்றும் பாதுகாப்பு செயலாளர் ஆகியோருக்கிடையே சிநேகபூர்வ கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

மேலும், இச்சந்திப்பினை நினைவுகூறும் வகையில் நினைவுச் சின்னங்களும் பரிமாறிக்கொள்ளப்பட்டன.