இராணுவத்தின் தலைமையிலான தனிமைப்படுத்தல் நிலையங்களில் தனிமைப்படுத்தலில் 3,372 க்கும் மேற்பட்டோர்

ஏப்ரல் 06, 2020

வெளிநாடுகளிலிருந்து நாடு திரும்பியவர்கள் உட்பட மொத்தம் 3,169 பேர், முப்படையினரின் தனிமைப்படுத்தல் நிலையங்களில் 14 நாள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக ராஜகிரியாவில் உள்ள கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் தேசிய செயல்பாட்டு மைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்றைய தினம் இலங்கை விமானப்படை தனிமைப்படுத்தும் நிலையங்களிலிருந்து விடுவிக்கப்பட்ட 203 நபர்களுடன் சேர்த்து தனிமைப்படுத்தலின் பின் வீடுகளுக்கு அனுப்பப்பட்டோரின் எண்ணிக்கை 3372 ஆக உயர்ந்துள்ளது.

இதேவேளை, அக்குரன பிரதேசத்தில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா நோயாளியுடன் தொடர்பு கொண்டிருந்ததாக சந்தேகிக்கப்படும் 144 நபர்கள், நேற்றைய தினம் வவுனியாவில் உள்ள புனானி தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு இராணுவத்தினரால் அழைத்துச் செல்லப்பட்டனர்.

மகரகம பிரதேசத்தை சேர்ந்த கொரோனா தொற்றுக்குள்ளானவருடன் தொடர்புகளைப் பேணியதாக சந்தேகிக்கப்படும் 45 பேரும், ரத்மலானவில் கொரோனா தொற்றுக்குள்ளானவருடன்
தொடர்புகளைப் பேணிய 34 நபர்கள் மற்றும் ஒருகொடவத்தையைச் சேர்ந்த கொரோனா தொற்றுக்குள்ளானவரின் 21 உறவினர்களும் புனானி தனிமைப்படுத்தும் மையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாக கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும்  தேசிய செயல்பாட்டு மைய தகவல்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.