ஹம்பாந்தோட்டை மாவட்ட பொது வைத்தியசாலையில் கடற்படையினரால் இரத்ததானமளிப்பு

ஏப்ரல் 06, 2020

கொரோனா வைரஸ் காரணமாக ஏற்பட்டுள்ள அவசர நிலைகளின் போது தேசிய இரத்த வங்கியில் போதுமான அளவு இரத்தத்தை இருப்பில் வைத்துக் கொள்ள இலங்கை கடற்படையினரால் அம்பாந்தோட்டை மாவட்ட பொது வைத்தியசாலையில் இரத்ததான நிகழ்வு இரண்டாவது தடவையாகவும் ஏற்பாடு செய்யப்பட்டது

ஹம்பாந்தோட்டையில் உள்ள கடற்படை அதிகாரிகளினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த இரத்ததான நிகழ்வில் கடற்படை அதிகாரிகளும் வீரர்களும் தாமாக முன்வந்து இரத்ததானம் வழங்கியமை குறிப்பிடத்தக்கது.