பம்பலபிடிய தொடர் மாடி வீடுகளில் தங்கியுள்ள குடியிருப்பாளர்கள் விமானப்படையினரால் மகிழ்விப்பு
ஏப்ரல் 07, 2020கொரோனா வைரஸ் தோற்று மேலும் பரவல் அடைவதை தடுக்கும் நோக்கில் அரசாங்கத்தினால் வீடுகளில் தங்கி இருக்குமாறு விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கு அமைய பம்பலப்பிட்டி தொடர்மாடி வீடுகளில் வசிக்கும் மக்களை மகிழ்விக்கும் வகையில் இலங்கை விமானப்படையினரால் நடமாடும் இசை நிகழ்வு ஒன்றினை ஏற்பாடு செய்யப்பட்டது.
கரோனா வைரஸ் பரவல் ஏற்படும் அதி ஆபத்தான வலயமாக கொழும்பு மாவட்டம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதால் வீடுகளில் தங்கியிருக்கும் மக்களின் சோர்வினை போக்க முப்படை மற்றும் பொலிஸாரினால் நடமாடும் இசை நிகழ்ச்சிகள் இம்மாவட்டத்தின் பல பிரதேசங்களில் ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றன.
இதற்கமைய இலங்கை விமானப்படையின் இரண்டாவது இசை நிகழ்ச்சி வனாத்தமுல்ல வீட்டுத் தொகுதிகள் நடாத்தப்பட்டது.
நாட்டில் கொரோன வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் அரசின் செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் இலங்கை விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுமங்கள டயஸின் பணிப்புரைக்கு அமைய இப் பொழுதுபோக்கு நிகழ்வுகள் இலங்கை விமானப்படையினரால் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.