கடற்படை வீரர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கான மருந்துப் பொருட்கள் வீடுவீடாக விநியோகிப்பு

ஏப்ரல் 07, 2020

நாட்டில் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டத்தின் காரணமாக கடற்படை வைத்தியசாலையில் சிகிச்சை பெறும் இளைப்பாறிய கடற்படை வீரர்கள் அவர்களது குடும்ப உறுப்பினர்கள்ஆகியோர்களுக்கான மருந்து பொருட்களை விநியோகிக்கும் பணிகளை இலங்கை கடற்படை ஆரம்பித்துள்ளது.

இதற்கமைய வைத்திய அதிகாரிகளினால் பரிந்துரைக்கப்பட்ட ஒரு மாதத்துக்கான மருந்துப் பொருட்கள் அவர்களுக்கு வழங்கி வைக்கப்பட உள்ளது.

இலங்கை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வா அவர்களின் பணிப்புரைக்கமைய நேற்றைய தினம் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களைச் சேர்ந்த கடற்படை வீரர்களுக்கு ஒரு மாதத்திற்கான மருந்து பொருட்கள் வழங்கும் நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டது.

மேற்படி நிகழ்வுகள் தெற்கு கடற்படை பிராந்திய கட்டளை தளபதி ரியர் அட்மிரல் கசப்பா போலின் மேற்பார்வையின் கீழ் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.