இலங்கை இலகு காலாட்படை பிரிவினர் 258 சமூர்த்தி பயனாளிகளுக்கு நிவாரண பொதிகள் வழங்கி வைப்பு

ஏப்ரல் 07, 2020

கிளிநொச்சி மாவட்டத்தின் தேவன்பிட்டி மற்றும் வெள்ளங்குளம் பகுதியிலுள்ள 258 சமூர்த்தி பயனாளிகளுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட உலர் உணவுப் பொதிகளை விநியோகிப்பதற்கான போக்குவரத்து வசதிகளை கிளிநொச்சி பாதுகாப்பு படை தலைமையாகத்தில் இணைப்பு பெற்ற  65அவது பிரிவின் இலங்கை இலகு காலாட்படை பிரிவை சேர்ந்த 19 படை வீரர்கள் வழங்கியுள்ளனர்.  

கிளிநொச்சி பாதுகாப்பு படை கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் ஜயந்த குணரத்ன 65 ஆவது பிரிவின் கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் டி.எம்.எச்.டி. பண்டார, மற்றும் 65ஆவது பிரிவின் கட்டளை அதிகாரி ஆகியோரின் மேற்பார்வையின் கீழ் ஆரம்பிக்கப்பட்ட இத்திட்டம் குறித்த பிரதசங்களுக்கான சமூர்த்தி உத்தியோகத்தர்களின் ஒத்துழைப்புடன் இடம்பெற்றது.