முல்லைத்தீவு விவசாயிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் இராணுவத்தினால் நடமாடும் மரக்கறி வியாபார வேலைத்திட்டம் முன்னெடுப்பு
ஏப்ரல் 07, 2020நந்திக்கடலை தளமாக கொண்ட மரக்கறி செய்கையாளர்களுக்கு உதவும் வகையிலும், முல்லைத்தீவு மாவட்ட விவசாயிகள் அவர்களின் மரக்கறிவகைகளை நடமாடும் சேவை ஊடாக விற்பனை செய்ய ஒத்துழைப்பு வழங்கும் வகையிலும் 64 ஆவது பிரிவின் இராணுவத்தினர் நடமாடும் விற்பனை வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளனர்.
நாட்டில் கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்தும் வகையில் தொடர்ந்தும் ஊரடங்கு சட்டம் அமுலில் இருப்பதன் காரணமாக மரக்கறி செய்கையாளர்கள் அவர்களின் அறுவடைப் பொருட்களை விற்பனை செய்வதற்காக சந்தைகளுக்கு வருவது தடைசெய்யப்பட்டுள்ளது. இதன்காரணமாக அவர்களின் வியாபாரப் பொருட்களை வீட்டுக்கு வீடு சென்று வியாபாரம் செய்யும் உத்திகளை உள்ளூர் அரச மற்றும் பொலிஸ் அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் முன்னெடுத்துள்ளனர்.
இதன்பிரகாரம் 642 ஆவது படைப்பிரிவின் 17 கஜபா படை வீரர்கள் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவு கிராம உத்தியோகத்தர், பொலிஸ் மற்றும் அப்பிரதேச சுகாதார அதிகாரிகள் ஆகியோரின் ஒத்துழைப்புடன் மரக்கறி செய்கையாளர்கள் தங்களது மரக்கறி உற்பத்திகளை ஞாயிற்றுக்கிழமையிலிருந்து (5) விற்பனை செய்யும்வகையில் ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளனர்.