இலங்கையின் கொவிட் -19 வைரஸினால் இறந்தோரின் எண்ணிக்கை 7 ஆக உயர்வு

ஏப்ரல் 08, 2020

சற்றுமுன்னர் ஐ.டி.எச் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த 44 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்ததை அடுத்து, இலங்கையின் கொவிட் -19 வைரஸினால் இறந்தோரின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர், வைத்தியர் அணில் ஜயசிங்க தெரிவித்துள்ளார்.  

தெஹிவளை கல்கிஸ்ஸை பகுதியை சேர்ந்த மாணிக்க வியாபாரியான இவர் அண்மையில் ஜேர்மனி நாட்டுக்கு சுற்றுப்பயணம் ஒன்றை மேற்கொண்டு நாடு திரும்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.