சமூக வலைத்தளத்தில் வதந்திகளை பரப்பிய நபர்கள் பொலிஸாரினால் கைது
ஏப்ரல் 08, 2020* தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளை சீர்குலைத்த ஒன்பது பேர் கைது
கொரோனா வைரஸ் தொடர்பில் போலியான காணொளிகளை சமூக ஊடகங்கள் ஊடாக பதிவேற்றிக் கொண்டிருந்த கெலனியமுல்லவில் வசிக்கும் ஒருவர் நேற்றைய தினம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட அவர், நேற்றைய தினம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் ஏப்ரல் 16 ஆம் திகதி வரை தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை, கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் பொல்கஹவெல வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகக் கூறி சமூக ஊடகங்களில் போலி செய்திகளை வெளியிட்ட மற்றொரு நபர் கைது செய்யப்பட்ட பின்னர் நேற்று இரவு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
சமூக வலைத்தளங்களின் ஊடாக போலியான தகவல்களை பரப்பும செயல்களில் ஈடுபட்டிருந்த மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட செயல்முறையை சீர்குலைக்க முயன்ற ஒன்பது பேர் கைது செய்யப்பட்ட பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சமூக வலைத்தளங்களை பயன்படுத்தி இவ்வாறான போலியான செய்திகள் மற்றும் காணொளிகளை பரப்புவோர்களை கண்காணித்து அவர்களை கைது செய்வதற்கு ரகசிய பொலிசார் மற்றும் பொலிஸ் ஊடகப் பிரிவு ஆகியன உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.