வரையறுக்கப்பட்ட'பெயார் பெர்ஸ்ட்' காப்புறுதி நிறுவனத்தினால் 'கொரோனா வைரஸ் பாதுகாப்பு நிதியத்திற்கு' ரூ. 10 மில்லியன் நன்கொடை
ஏப்ரல் 09, 2020பெயார்பக்ஸ் குளோபல் குழுமத்தின் இணை நிறுவனங்களில் ஒன்றான வரையறுக்கப்பட்ட'பெயார் பெர்ஸ்ட்' காப்புறுதி நிறுவனத்தினால் 'கொரோனா வைரஸ் ஒழிப்பு நிதியத்திற்கு' ரூ. 10 மில்லியன் நன்கொடையளிக்கப்பட்டுள்ளது. கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் அரசாங்கத்தின் அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு உதவும் வகையில் இந் நிதி வழங்கப்பட்டுள்ளது.
வரையறுக்கப்பட்ட'பெயார் பெர்ஸ்ட்' காப்புறுதி நிறுவனம், கனடாவின் டொரொண்டோ நகரத்தை தலைமையகமாகக் கொண்ட நிறுவனமாகும். இன்று அது, சொத்து மற்றும் விபத்து காப்பீட்டாளர் வரிசையில் இலங்கையில் முன்னணி வகிக்கும் பொது காப்பீட்டு நிறுவனங்களில் ஒன்றாக விளங்குகிறது.
இந் நிறுவனம், சுகாதார ஊழியர்கள் மற்றும் படைகளின் பாதுகாப்பிற்காக பாதுகாப்பு அங்கிகள் மற்றும் முகக் கவசங்கள் ஆகியவற்றை விநியோகிக்க முன்வந்துள்ளது.
குறித்த இந்நிறுவனத்தின் நிர்வாக பணிப்பாளரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான டொக்டர் சஞ்சீவ் ஜா மற்றும் நிறுவனத்தின் பிரதிநிதிகள் இணைந்து ரூ. 10 மில்லியன் பெறுமதியான காசோலையை பாதுகாப்புச் செயலாளர் (ஓய்வு )கமல் குணரத்னவிடம் கையளித்தனர்.
தொற்றுநோயை கட்டுப்படுத்த களத்தில் மன உறுதியுடனும் அர்ப்பணிப்புடனும் சேவையாற்றும் படையினருக்கு தனது நன்றிகளை தெரிவித்துக் கொள்வதாக டொக்டர் ஜா இதன்போது தெரிவித்தார்.
இந்த தீர்மானம் மிக்க சூழ்நிலையில் ஒவ்வொரு நபரும் தற்போதுள்ள நிலைமையை கட்டுப்படுத்துவதற்கான பொறுப்பினை கொண்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
அந்த வகையில் எமது படையினரால் மேற்கொள்ளப்படும் இந்நடவடிக்கை ஒரு மகத்தான பணியாகும். எமது நிறுவனம் , சமூக நல்வாழ்வை பாதுகாப்பதிலும் ஆதரவளிப்பதிலும் ஒரு முக்கிய பங்கு வகிக்கும் என்பதை நாம் முழுமையாக நம்புகிறோம். நாம் ஒன்றாக இணைந்து மற்றும் ஒருவருக்கொருவர் ஆதரவாக இருந்து இந்த அச்சுறுத்தலை நாம் சமாளிப்போம், " என அவர் தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் வரையறுக்கப்பட்ட'பெயார் பெர்ஸ்ட்' காப்புறுதி நிறுவனத்தின் பிரதிநிதிகளான டிலான் மிட்செல் மற்றும் சஞ்சய் சிரிவர்தன மற்றும் ஹரிமக திட்டத்தின் தலைவர் கணிஷ்க டி சில்வா ஆகியோரும் கலந்து கொண்டனர்.