கடற்படையினரின் உதவியுடன் படகில் ஏற்பட்ட தீ கட்டுப்பாட்டுக்குள்

ஏப்ரல் 10, 2020

காலி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட பல நாள் மீன்பிடிப் படகொன்றில் நேற்று (8) ஏற்பட்ட திடீர் தீ விபத்தினை தெற்கு கட்டளையக கடற்படை தீயணைப்பு பிரிவினர் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.

காலி தீயணைப்பு படைப்பிரிவுடன் இணைந்து மேற்கொண்ட இக்கூட்டு தீயணைப்பு நடவடிக்கையில் கடற்படையினர் இரண்டு தண்ணீர் பவுசர்களை பயன்படுத்தியுள்ளனர். தீயணைப்பு படையினர் திறம்பட செயற்பட்டு அருகிலுள்ள படகுகளுக்கு தீ பரவாமல் தீயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை துறைமுக பொலிஸார் முன்னெடுத்துவருகின்றனர். தீ ஏற்பட்டதற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.