கொழும்பு தேசிய வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவில் கடற்படையினரால் தொற்று நீக்கும் அறை நிர்மாணிப்பு

ஏப்ரல் 10, 2020
கடற்படை சமூக பொறுப்புணர்வு திட்டத்தின் கீழ் கடற்படை ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி பிரிவினால் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவில் மற்றுமொரு கிருமி தொற்று நீக்கும் அறை நிர்மாணிக்கப்பட்டுள்ளது. 
 
கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வாவின் நேரடி மேற்பார்வையின் கீழ் கடற்படை சமூக பொறுப்புணர்வு திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. 
 
புதிய தொற்று நீக்கல் அறை மூலம் குறித்த வைத்தியசாலைக்கு பெருமளவில் வருகை தரும் வெளிநோயாளர்கள் மற்றும் வைத்தியசாலை ஊழியர்கள் ஆகியோர் நன்மையடையவுள்ளனர்.