புதையல் தோண்டிய ஆறு பேர் கடற்படையினரால் கைது

ஏப்ரல் 10, 2020
புத்தளம், ஏத்தாள எரம்புக்குதெல்ல பிரதேசத்தில் புதையல் தோண்டிய ஆறு பேர் ஏப்ரல் 8ம் திதி கைது செய்யப்பட்டனர்.
 
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 38 தொடக்கம் 55 வயதுகளுக்கு இடைப்பபட்டவர்கள் எனவும் லொறி உட்பட புதையல் தோண்டுவதற்கு பயன்படுத்தப்பட்ட பொருட்கள் என்பன கைப்பற்றப்பட்ட நிலையில் மேலதிக விசாரணைக்க கல்பிட்டி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப் பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.