புவக்பிட்டிய பகுதியில் சிவில் பாதுகாப்பு படையினரால் குறைந்த விலையில் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை

ஏப்ரல் 10, 2020
மீகொட, புவக்வத்தை பகுதியில் நேற்றய தினம் சிவில் பாதுகாப்பு படையினரால் வீடுகளுக்குத் தேவையான அத்தியாவசிய பொருட்கள் நியாயமான விலையில் விற்பனை செய்யப்பட்டது. 
 
நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் காரணமாக அத்தியாவசிய பொருட்களை பெற்றுக்கொள்ள பொதுமக்கள் எதிர்நோக்கும் சிரமத்தை தவிர்க்கும் வகையில் சிவில் பாதுகாப்பு படை திணைக்கள பணிப்பாளர் நாயகம் ரியர் அட்மிரல் ஆனந்த பீரிஸின் பணிப்புரைக்கமைய குறித்த திட்டம் முன்னெடுக்கப்பட்டது.